Home
Mobile

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 120W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டே அதிரும்படியான பட்ஜெட்டில் 200 எம்பி மெயின் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 120W ஹைப்பர் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) போன் கிடைக்கிறது. ரூ.31,999 பட்ஜெட்டில் வெளியாகிய இந்த போன் வெறும் ரூ.24,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications): இந்த போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) வருகிறது. 3 மேஜர் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கிறது.

வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 3D டிஸ்பிளே.. எந்த போன்?

1.5K ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. 3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curved Display) டிசைன் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி பேக் செய்யப்பட்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) டிஸ்பிளே பாதுகாப்பு கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 68 பில்லியன் கலர் டெப்த் (Color Depth) கிடைக்கிறது. இந்த ரெட்மி மாடலில் இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In Display Fingerprint Sensor) இருக்கிறது. டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் இருக்கிறது.

சாம்சங் ஐசோசெல் எச்பி3 (Samsung ISOCELL HP3) சென்சாருடன் 200 எம்பி அல்ட்ரா-ஹை ரெஸ் மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stablization), எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stablization) டெக்னாலஜிகள் மற்றும் சூப்பர்கியூபிடி ஆட்டோபோகஸ் (SuperQPD Autofocus) வருகிறது.

மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 2X மற்றும் 4X லாஸ்லெஸ் ஜூமிங், 4K வீடியோ ரெக்கார்டிங் இருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் டெப்த் கன்ட்ரோல் மற்றும் 720p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 120W ஹைப்பர் சார்ஜிங் (HyperCharging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.

வெறும் 19 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். பேட்டரி ஓவர்சார்ஜ் மற்றும் ஹீட் கன்ட்ரோல்களுக்காக ஸ்மார்ட் சார்ஜிங் என்ஜின் (Smart Charging Engine) வருகிறது. எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் (X-axis Linear Motor) வருகிறது. இந்த ரெட்மியில் ப்யூசன் பிளாக் (Fusion Black), ப்யூசன் ஒயிட் (Fusion White) மற்றும் ப்யூசன் பர்பிள் (Fusion Purple) கலர்கள் உள்ளன.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் பிளிப்கார்ட் (Redmi Note 13 Pro Plus Flipkart): இந்திய மார்கெட்டில் வெளியானபோது, இதன் 8 ஜிபி + 256 ஜிபி மாடலின் விலை ரூ.31,999ஆக இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.27,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக மல்டிபிள் பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro Plus With 200MP Camera Sale Under Rs 25K in Flipkart Discount Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X