Home
Mobile

மிரளவிட்ட பட்ஜெட்.. வெறும் ரூ.23,100 போதும்.. 12GB ரேம்.. 200MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மார்கெட் மிரளும் விதமாக கம்மி பட்ஜெட்டில் 12ஜிபி ரேம், 200எம்பி கேமரா, 120W சார்ஜிங், லெதர் பேனல் போன்ற பக்கா பிரீமியம் அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) போன் விரைவில் வெளியாகயிருக்கிறது.

சீனா மார்கெட்டில் விற்பனைக்கு வந்து மிகப்பெரும் வரவேற்பு பெற்றுவரும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனின் குளோபல் வேரியண்ட் அடுத்த சில மாதங்களில் வெளியாக இருக்கிறது. இந்தியாவிலும் கடந்த மாதம் பிஐஎஸ் (BIS) சான்றிதழ் பெற்றது. இந்த சூழலில் ஃஎப்சிசி (FCC) சான்றிதழும் பெற்றுவிட்டது.

வெறும் ரூ.23,100 போதும்.. 12GB ரேம்.. 200MP சோனி கேமரா.. எந்த மாடல்?

இதனால், இந்த ரெட்மி போன் வரும் டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போனின் விலையையும் அம்சங்களையும் பார்த்தால், எவ்வளவு மாதங்கள் வேண்டுமானாலும் காத்திருந்து வாங்க தோன்றும். ஆகவே, சீனாவில் இந்த போனுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, கொடுக்கப்பட்ட அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications): இந்த ப்ரோ மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் மற்றும் மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali-G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் எம்ஐயூஐ 14 ஓஎஸ் (MIUI 14) கொண்டுள்ளது. இந்த ரெட்மி போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. அதோடு 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் உள்ளது.

அதோடு எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொண்டிருக்கிறது. மொத்தமாக கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி மாடலில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட் வருகின்றன. இந்த போன் பிரம்மாண்ட கேமரா செட்டப் கொண்டுள்ளது.

சாம்சங் எச்பி3 சென்சாருடன் கூடிய 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 சென்சாருடன் கூடிய 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி02பி10 சென்சாருடன் கூடிய 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி16ஏ1க்யூ சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. மேலும், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் லெதர் பேக் பேனல் வேரியண்ட் கிடைக்கிறது. இந்த போனின் சீன மார்கெட் விலையை பார்த்தால், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,100ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,150ஆகவும் இருக்கிறது. இதன் குளோபல் வேரியண்ட்டின் விலை கிட்டத்தட்ட இந்த விலையையொட்டி இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் ரூ.25,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro Plus With 12GB RAM Specifications, Price Expected Launch Timeline in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X