Home
Mobile

மார்கெட் அதிரும்.. வெறும் ரூ.23,000 போதும்.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

வெறும் ரூ.23,000 பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே, 12ஜிபி ரேம் போன்ற பிரம்மாண்ட பிரீமியம் அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications): இந்த ரெட்மி நோட் மாடலில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

ரூ.23000 க்கு 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?

அதோடு 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, 12 பிட் கலர் டெப்த், டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டுள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் வருகிறது. அதோடு மாலி ஜி610 எம்சி4 ஜிபியு (Mali-G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. எம்ஐயூஐ 14 ஓஎஸ் (MIUI 14) சப்போர்ட் கொண்டுள்ளது.

இந்த போனில் மூக்கில் விரல் வைக்கும்படியான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சார் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivsion OV02B10) சென்சார் கொண்ட 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

அதே போல ஓம்னிவிஷன் ஓவி16ஏ1க்யூ (Omnivision OV16A1Q) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. கேமராவை போலவே பிரம்மாண்ட பேட்டரி செட்டப் கொண்டுள்ளது. ஆகவே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இதற்கு யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது.

IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. அதேபோல இன்பிராரெட் சென்சார் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொண்டிருக்கிறது.

இதில் டைப்-சி இயர்போன் ஜாக் வருகிறது. இந்த போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,100ஆக இருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,150ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் குளோபல் வேரியண்ட் ஒரு சில மாதங்களில் வெளியாக இருக்கிறது. அதே வேளையில், இந்தியாவிலும் வெளியாக இருக்கிறது. ஆகவே, டிசம்பர் மாதத்துக்குள் இந்தியாவில் இந்த போன் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. ரூ.23,000 பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் போன் வேண்டுமானால், இந்த ரெட்மி போன் நல்ல தேர்வாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro Plus With 12GB RAM, Dimensity 7200 Ultra Launch India Soon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X