அவசரப்பட்டு ரெட்மி 13சி 5ஜி வாங்காதீங்க.. வெயிட் பண்ணுங்க.. வருகிறது பிரம்மாண்டமான போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் இன்று ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.10,999 விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 18W சார்ஜிங் போன்ற சாதாரண அம்சங்களை பேக் செய்கிறது இந்த ரெட்மி 13சி 5ஜி.
இந்நிலையில் ரெட்மி நிறுவனம் தற்போது புதிய டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது, அதில் வரும் 2024 ஜனவரி மாதம் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன் ஆனது தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

எனவே அவசரப்பட்டு ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவதை விட இந்த ஒரு மாதம் காத்திருந்து அடுத்த மாதம் அறிமுகமாகும் தரமான ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனை வாங்குவது நல்லது. மேலும் ஆன்லைனில் வெளியான ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro+ Specifications): 6.67-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா (MediaTek Dimensity 7200 Ultra) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன். மேலும் ஜி610 எம்சி4 ஜிபியு (Mali - G610 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 13 ( Android 13) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி போன் அறிமுகமாகும்.
ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு வழங்கப்படும். குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இந்த போனில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speaker) உள்ளன.
ஒஐஎஸ் (OIS) ஆதரவு கொண்ட 200எம்பி Samsung ISOCELL HP3 கேமரா + 8எம்பி சோனி IMX355 சென்சார் (அல்ட்ரா வைடு கேமரா) + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன். மேலும் 16எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000 எம்ஏச் பேட்டரி வசதியுடன் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் (In-displat fingerprint scanner), ஐபி68 ரேட்டிங், டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.3, என்எப்சி,ஜிபிஎஸ், குளோனாஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








