ரூ.9000 விலை குறைப்பு.. 200MP சாம்சங் கேமரா, 120W சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட Redmi போன்.. Amazon அதிருது!
ரூ.30,000 க்கு மேலான பட்ஜெட்டில் அறிமுகமான ஒரு ரெட்மி ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.20,000 க்கு அருகிலான பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது. அதென்ன மாடல்? அதன் அசல் அறிமுக விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? அமேசான் 2025 குடியரசு தின விற்பனை எப்போது தொடங்கும்? இதோ விவரங்கள்:
அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் ரெட்மி மாடல் - ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் (Redmi Note 13 Pro Plus) ஸ்மார்ட்போனாகும். தற்போது இது ரூ.23,000 க்கும் குறைவான விலையில் வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் ரூ.31,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது, அமேசான் இந்தியாவில் ரூ.22,929 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இது நேரடியாக ரூ.9070 என்கிற தள்ளுபடியை அல்லது விலை குறைப்பை பெற்றுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக ரூ.2,000 வரை தள்ளுபடியும் கிடைக்கும். ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை இன்னும் குறைக்க விரும்பினால் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்து கொள்ளலாம்.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன், 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், டால்பி விஷன் மற்றும் HDR10+ ஆதரவு, 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
இது 8ஜிபி / 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி / 512ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜை கொண்டுள்ளது . கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது OIS மற்றும் EIS ஆதரவு உடனான 200MP சாம்சங் ISOCELL HP3 கேமரா + 8MP அல்ட்ராவைட் ஷூட்டர் + 2MP மேக்ரோ கேமரா ஆகியவற்றை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 16MP செல்பீ கேமரா உள்ளது.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் திறன்களை பொறுத்தவரை ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 120W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டு உள்ளது. ரெட்மி நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 20 நிமிடங்களுக்குள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து முழுமையாக சார்ஜ் செய்துவிடும்.
2025 ஆம் ஆண்டுக்கான அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனை எப்போது தொடங்கும்? பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவானது அதன் கிரேட் ரிபப்ளிக் டே விற்பனைக்கான (Amazon great republic day sale 2025) ஆரம்ப தேதியை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்க உள்ளது.
இந்த விற்பனையின் போது என்னென்ன ரெட்மி மற்றும் ஷாவ்மீ ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது? ரெட்மி நோட் 14 5ஜி, ரெட்மி ஏ4 5ஜி, ரெட்மி 13 5ஜி, ரெட்மி 13சி 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ஷாவ்மீ 14
வேறு என்னென்ன முக்கிய ஸ்மார்ட்போன்கள் மீது டிஸ்கவுண்ட் கிடைக்கும்? ஒன்பிளஸ் நோர்ட் 4, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 5லைட் ஜி, ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4, ஒன்பிளஸ் 12, ஐக்யூ 13 5ஜி. ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ 5ஜி, ஐக்யூ இஸட்9எக்ஸ் 5ஜி, ஐக்யூ இஸட்9எஸ் 5ஜி, ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி மற்றும் ஐக்யூ 12 5ஜிமாடல்கள் மீது ஆபர் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








