விஸ்வரூப விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 200 எம்பி ஓஐஎஸ் கேமரா, 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற ஒட்டுமொத்த பிரீமியம் அம்சங்களையும் கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன் டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specification): இந்த ரெட்மியின் டிஸ்பிளே பீச்சர்களே மிரள விட்டிருக்கிறது. 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே (3D Curved AMOLED Display) வருகிறது.

இந்த டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது. அதுமட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 12-பிட் கலர் டெப்த் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் வருகிறது.
கர்வ்ட் டிஸ்பிளே மாடலென்பதால், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் கொண்டிருக்கிறது. ஆகவே, அல்ட்ரா பிரீமியம் டிஸ்பிளே அனுபவம் மற்றும் குவாலிட்டியை இந்த ரெட்மி போன் கொடுக்கும். ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடையாது, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மட்டுமே வருகிறது.
இருப்பினும், நல்ல கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200-Ultra 4nm) சிப்செட் மற்றும் மாலி -ஜி610 எம்சி 4 ஜிபியு (Mali G610 MC4 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
இந்த ரெட்மி போனில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட மூன்று மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. டிஸ்பிளேவுக்கு அடுத்தப்படியாக டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) இருக்கிறது.
இந்த ரெட்மியில் 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. மெயின் கேமராவில் சாம்சங் எச்பி3 (Samsung HP3 Sensor) மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. ஸ்மார்ட் ஐஎஸ்ஓ ப்ரோ (Smart-ISO Pro), சூப்பர்கியூபிடி ஆட்டோபோகஸ் (SuperQPD Autofocus) போன்ற பிரத்யேக பீச்சர்கள் வருகின்றன.
அதுமட்டுமல்லாமல், 4K வீடியோ ரெக்கார்டிங், 1080p ஸ்லோவ் மோஷன் ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டிருக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) உடன் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரெட்மியில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. IP68 ரெசிஸ்டன்ட் கொண்டிருக்கிறது.
யுஎஸ்பி டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ், ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள், 5ஜி எஸ்ஏ, டூயல் 4ஜே வோஎல்டிஇ சப்போர்ட் உள்ளது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.31,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த டிஸ்கவுண்ட் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த போனின் ஆரம்ப மாடலை வெறும் ரூ.29,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் 200 எம்பி கேமரா, 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைப்பது, இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி போனில் மட்டுமேயாகும்.


Click it and Unblock the Notifications








