இது வெளுத்து கட்டும்.. பட்ஜெட்ல 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
200 எம்பி மெயின் கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம், கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 16 ஜிபி ரேம், 67W டர்போ சார்ஜிங், 5100mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G ) போனின் ஆலிவ் கிரீன் வேரியண்ட் களமிறங்கி இருக்கிறது. இந்த ரெட்மி நோட் ப்ரோவின் விலை, விற்பனை மற்றும் பீச்சர் விவரங்கள் இதோ.
ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 Pro 5G Specifications): இந்த ரெட்மியில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa-core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் வருகிறது. 8 ஜிபி டைனாமிக் ரேம் சப்போர்ட் உள்ளது.

8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வருகிறது. 7.98 மிமீ தடிமன் மற்றும் 187 கிராம் எடை வருகிறது. 6.67 இன்ச் (2712x 1220 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.
120Hz ரெஃப்ரெஷ் ரேட், 12 பிட் கலர் டெப்த், பி3 கலர் காமட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, பிரீமியம் அவுட்புட் கிடைக்கும்.
இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனில் 200 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு + 2 எம்பி மேக்ரோ கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. மெயின் கேமராவில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் வருகிறது. 1080p வீடியோ ஷூட் கொண்ட 16 எம்பி செல்பீ உள்ளது.

67W டர்போ சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி-சி போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-screen Fingerprint Sensor) மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) செக்யூரிட்டி வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. ஈசிம் (eSIM) பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த ரெட்மியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், வை-பை 5 (Wi-Fi 5), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) மற்றும் என்எப்சி (NFC) ஆகியவை வருகின்றன. ஆடியோவில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்டிருக்கிறது. டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) வருகிறது.
இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.33,330ஆக இருக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஆகவே, விரைவில் இந்தியா உள்பட மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப விலையில் மாற்றங்கள் இருக்கும்.


Click it and Unblock the Notifications