Home
Mobile

மொத்தமாக முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. 200MP கேமரா.. 67W சார்ஜிங்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

200எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனை தள்ளுபடி விலையில் வாங்க விருப்பம் இருக்கிறதா? அப்போ இந்த பிளிப்கார்ட் ஆஃபரை மிஸ் பண்ணாதீங்க. அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (REDMI Note 13 Pro 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட்டில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.16999 விலையில் இந்த போனை வாங்கிவிட முடியும்.

மொத்தமாக முடிச்சு விட்ட பிளிப்கார்ட்..ஆஃபரில் Redmi 5ஜி போன்..

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (REDMI Note 13 Pro 5G specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) சிப்செட் உடன் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமானது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 1.5K அமோலெட் (AMOLED)டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2712 x 1220 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

200எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மொத்தமாக முடிச்சு விட்ட பிளிப்கார்ட்..ஆஃபரில் Redmi 5ஜி போன்..

அதேபோல் 5100mAh பேட்டரி உடன் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. பின்பு இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உடன் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் ஒயிட் (Arctic White), கோரல் பர்பிள் (Coral Purple) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) நிறங்களில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro 5G with 8GB RAM price slashed on Flipkart: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X