தலைவன் வேற ரகம்.. ரூ.21,999 பட்ஜெட்ல ஸ்கார்லெட் ரெட்.. 200MP கேமரா.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் ஐசோசெல் சென்சார் கொண்ட 200 எம்பி கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, 67W டர்போ சார்ஜிங் கொண்ட 5100mAh போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட்டுடன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) போனின் ஸ்கார்லெட் ரெட் எடிஷன் ( Scarlet Red Edition) களமிறங்கி இருக்கிறது.
ஆரம்பமே ரூ.3000 டிஸ்கவுண்ட் வருவதால், விற்பனையில் பட்டையை கிளப்ப இருக்கிறது. இந்த ஸ்கார்லெட் ரெட் எடிஷனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. 128 ஜிபி மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. அதேபோல 256 ஜிபி மாடலின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது.

அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆனால், அமேசான் தளத்தில் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.3000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனின் ஸ்கார்லெட் ரெட் எடிஷனை ரூ.21,999 பட்ஜெட்டில் வாங்கலாம். இப்போது, அந்த போனின் பீச்சர்களை பார்ப்போம்.
ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 Pro 5G Specifications): இந்த நோட் மாடலில் கலர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. ஆகவே, பீச்சர்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியான மாடலை போலவே இருக்கிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரையில், 1.5K ரெசொலூஷன் கொண்ட 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) அமோலெட் பேனல் வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 446 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 1800 பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசிஐ பி3 கலர் காமட் வருகிறது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வருகிறது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-Display Fingerprint Sensor) வருகிறது. சாம்சங் ஐசோசெல் எச்பி3 சென்சாருடன் 200 எம்பி அல்ட்ரா-ஹை ரெஸ் மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் சூப்பர்கியூபிடி ஆட்டோ போகஸ் (SuperQPD Autofocus), ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) இமேஜ் ஸ்டெபிளைசேஷன் டெக்னாலஜி வருகிறது.
இந்த மெயின் கேமரா மட்டுமல்லாமல், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. 4X இன்-சென்சார் ஜூமிங் மற்றும் 4K வீடியோ ஷூட் சப்போர்ட் கொண்டிருக்கிறது. டெப்த் கன்ட்ரோல், நைட் மோட் போர்ட்ராய்டு மோட் உள்ளிட்ட கேமரா பீச்சர்கள் வருகின்றன.
இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி போனில் 16 எம்பி ஷூட்டர் வருகிறது. அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் சிப்செட் வருகிறது. 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்ளது. இந்த ரெட்மி மாடலானது, 187 கிராம் எடை மற்றும் 7.98 மிமீ தடிமன் வருகிறது.
67W டர்போ சார்ஜ் மற்றும் ஓவர்லோட் புரொடெக்சன் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது. IP54 வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட், எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் கொண்டிருக்கிறது. இந்த ரெட்மியில் ஸ்கார்லெட் ரெட் எடிஷன் மட்டுமல்லாமல், மிட்நைட் பிளாக், ஆக்டிக் ஒயிட் மற்றும் கோரல் பர்பிள் ஆகிய 3 கலர்களும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications