Home
Mobile

Redmi தந்த சர்ப்ரைஸ்.. இந்தியாவுக்கு வந்த புது பட்ஜெட் 5G Mobile.. மாஸ் காட்டும் ரெட் கலர்.. எந்த மாடல்?

சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான ரெட்மி (Redmi) பிராண்ட் சமீபத்தில் தான் அதன் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) ஸ்மார்ட்போன் மாடலை புதிதாக ஒலிவ் க்ரீன் (Olive Green) நிறத்தில் அறிமுகம் செய்தது. இப்போது, வெளியாகியுள்ள புதிய தகவலின் படி, ரெட்மி நிறுவனம் மீண்டும் ஒரு முறை இந்திய வாடிக்கையாளர்களுக்கு சர்ப்ரைஸ் (Surprise) தரவிருப்பதாக தெரிகிறது. ரெட்மி நிறுவனம் அதன் ரெட் (Red) நிற ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் இது பார்ப்பதற்கே அட்டகாசமான லுக்கில், மிகவும் ப்ரீமியமான ஸ்மார்ட்போனாக காட்சியளிக்கிறது. இந்த ரெட் நிற வேரியண்ட் மாடல் ஜனவரி மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வெளியானது. சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ரெட்மி நோட் 13 ப்ரோ நியூ இயர் எடிஷன் (Redmi Note 13 Pro New Year Edition) என்ற பெயருடன் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Redmi தந்த சர்ப்ரைஸ்.. இந்தியாவுக்கு வந்த புது பட்ஜெட் 5G Mobile..

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ரெட் வேரியண்ட் (Redmi Note 13 Pro 5G Red Variant):

இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ரெட் வேரியண்ட் ஸ்மார்ட்போன் (Redmi Note 13 Pro 5G Red) சாதனம் அமேசான் வழியாக ஜூன் 25, 2024 முதல் அறிமுகம் செய்யப்படுமென்று தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த் நிறத்தை தவிர, ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) ஸ்மார்ட்போனில் இதற்கு முன்பு வழங்கப்பட அதே அம்சங்கள் தான் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ரெட் வேரியண்ட் சாதனம் (Redmi Note 13 Pro 5G Red Variant) 6.67" இன்ச் அளவு கொண்ட 120Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh rate) உடன் கூடிய 1.5K AOLED டிஸ்பிளேவை (Display) ஆதரிக்கிறது. இது 1800 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் 2712×1220 பிக்சல் ரெசொலூஷனுடன் வருகிறது. இது 12GB ரேம் உடன் 512GB ஸ்டோரேஜ்ஜை பெரும்.

இது ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 சிப்செட் (Snapdragon 7s Gen 2 SoC) உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14) உடன் கூடிய MIUI 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் 200MP + 8MP + 2MP கேமராவை கொண்டுள்ளது. இது 16MP செல்பி கேமராவுடன் வருகிறது. இது 5000mAh பேட்டரி உடன் 67W பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ரெட் விலை (Redmi Note 13 Pro 5G Red Price):

JBL ஸ்டீரியோ ஆடியோ டூயல் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது கேம்ஸ், வீடியோஸ், மூவீஸ் போன்றவைகளில் சிறந்த ஆடியோவை வழங்குகிறது. இது Hi-Res ஆடியோவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் டூயல் நானோ சிம் கார்டு ஆதரவுடன் 5G/4G/3G/2G நெட்வொர்க்கை ஆதரிக்கிறது. இதில் கூடுதல் இணைப்பு விருப்பங்களாக ப்ளூடூத் 5.2, இன்ஃபிராரெட் சென்சார், WiFi 6, NFC 3.0 ஆதரவு, போன்ற அம்சங்களை அடக்கியுள்ளது.

இதன் விலை 8GB + 128GB ஸ்டோரேஜ் மாடல் ரூ.24,999 என்ற விலையிலும், இதன் 8GB + 256GB மாடல் ரூ. 26,999 என்ற விலையிலும், 12GB + 256GB ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 28,999 என்ற விலையை பெரும் என்று தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புவோம் இரண்டு நாட்கள் பொறுத்திருந்து இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro 5G Red Variant Launching June 25 2024 In India Price Starts Rs 24999 Only
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X