அடிச்சு தூக்கும் பட்ஜெட்.. ரூ.25,000 போதும்.. 200MP கேமரா.. 67W சார்ஜிங்.. 1TB மெமரி.. எந்த மாடல்?
ரெட்மி பிரியர்களை அறக்க பறக்க செய்யும் விதமாக 200எம்பி கேமரா, 12ஜிபி ரேம், 1டிபி மெமரி, 67W சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி (Redmi Note Pro 13 4G) போன் பட்ஜெட்டில் வெளியாகயிருக்கிறது.
ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி அம்சங்கள் (Redmi Note Pro 13 4G Specifications): இந்த ரெட்மி ப்ரோ போனில் 6.67 இன்ச் (1080× 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்ட்ரா 6என்எம் (Octa Core MediaTek Helio G99 Ultra 6nm) சிப்செட் வருகிறது.
அதோடு எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மாலி - ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி போனில் 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வர இருக்கின்றன. அதோடு 1டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் வருகிறது.
இந்த ரெட்மி போனில் 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கொண்ட கேமராவாகும். அதோடு 4K வீடியோ ரெக்கார்டிங், 4X லாஸ்லெஸ் ஜூமிங், ஃபிலிம் ஃபில்டர் போன்ற பீச்சர்கள் வருகின்றன.
அதேபோல 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த கேமராவில் 1080p வீடியோ ரெக்ரார்டிங் சப்போர்ட் வருகிறது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி போனில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியில் பூஸ்ட் மோட், ஸ்மார்ட் சார்ஜிங், ஓவர்-லோட் புரொடெக்சன் போன்ற சப்போர்ட் வருகின்றன.

யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங், 3.5 எம்எம் ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது. அதோடு டால்பி அட்மோஸ் சப்போர்ட் வருகிறது. சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது.
IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. இந்த போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், டூயல் 4ஜி எல்டிஇ (Dual 4G LTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), என்எப்சி (NFC) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை வருகின்றன.
இந்த போனில் கிரே (Grey), வயலெட் (violet) மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த போன் சீனா மற்றும் ஐரோப்பிய மார்கெட்டுகளில் முதலில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் மேற்கூறிய அம்சங்கள் கசிந்துள்ளன. ஏனெற்கனவே, ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்தியாவில், வரும் ஜனவரி 4ஆம் தேதி வெளியாகிறது. ஆகவே, சீன வெளியீட்டுக்கு பிறகு இந்த 4ஜி சீரிஸ் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சீனாவில் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி போனின் ஆரம்ப விலை விலை ரூ.30,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆகவே, இந்த 4ஜி போனின் விலை ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








