மிரளவிட்ட பட்ஜெட்.. ரூ.20,750 போதும்.. 200MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
மார்கெட் அதிரும் விதமாக ரூ.20,750 பட்ஜெட்டில் 200எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, சாம்சங் சென்சார் போன்ற மிரளவிடும் அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி (Redmi Note 13 Pro 4G) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரம் இதோ.
ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி அம்சங்கள் (Redmi Note 13 Pro 4G Specifications): இந்த போனில் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மாடலாகும்.

இந்த டிஸ்பிளேவில் 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த ரெட்மியில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்ட்ரா 6என்எம் (Octa Core MediaTek Helio G99 Ultra 6nm) சிப்செட் வருகிறது. அதோடு MIUI 14 ஓஎஸ் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் வருகிறது.
இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி போனில் 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதில் சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் சிஸ்டம் கொண்டுள்ளது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமரா டெக்னாலஜி கொண்ட மாடலாகும்.
அதோடு 16 எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வருகிறது. அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது.
இந்த ரெட்மியில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. IP54 தரத்தில் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS ) மற்றும் என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
இந்த ரெட்மி நோட் 13 4ஜி போனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), லாவெண்டர் பர்பிள் (Lavender Purple) மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முதலில் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாகிறது. முன்னதாக ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் போன்கள் இந்தியாவில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருந்தது. அதேபோல இந்த 4ஜி போனுக்கும் மிரளும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








