ஆடிப்போச்சு மார்கெட்.. பட்ஜெட்ல 200MP கேமரா.. 12GB ரேம்.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
பட்ஜெட்டில் 200எம்பி கேமரா, 12ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, ஓஐஎஸ் கேமரா போன்ற அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி (Redmi Note Pro 13 4G) போன் வெளியாக இருக்கிறது. இந்த போனின் அம்சங்கள், விலை விவரங்களை பார்ப்போம்.
ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி அம்சங்கள் (Redmi Note Pro 13 4G Specifications): இந்த ரெட்மி ப்ரோ போனில் எம்ஐயுஐ 14 (MIUI 14) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G99 Ultra) சிப்செட் வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டிருக்கிறது.

இந்த மாடலில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ரெட்மி போனில் 6.67 இன்ச் (1080× 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி+ (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி போனில் 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட மாடலாகும்.
அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. எல்இடி பிளாஷ் கொண்டிருக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி மாடலில் சைடு பேஸிங் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல 3.5 மிமீ இயர்போன் ஜாக் (Earphone Jack), யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) வருகிறது. இந்த ரெட்மி போனில் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் (Dust/Splash) ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த போனில் கேமராவை போலவே பேட்டரி சிஸ்டமும் மிரட்டலாகவே இருக்கிறது. ஆகவே, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த ரெட்மி ப்ரோ போன் டூயல் 4ஜி எல்டிஇ (Dual 4G LTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ 4ஜி கிரே (Grey), வயலெட் மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. 187 கிராம் எடை கொண்டுள்ளது. இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.31,646 ஆக இருக்கிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.36,180 ஆகவும் இருக்கிறது. இந்த போன் முதலில் ஐரோப்பிய மார்கெட்டில் வெளியாகிறது. ஏனென்றால், மேற்கூறிய அம்சங்கள் மற்றும் விலை குறித்த விவரங்கள் அந்த மார்கெட்டிலேயே கசிந்துள்ளது. அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.
இந்தியாவில் ரெட்மி நோட் 13 சீரிஸ் போன்கள் வரும் ஜனவரி 4ஆம் தேதி வெளியாகின்றன. ஆனால், இதில் ரெட்மி நோட் 13 5ஜி, ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகிய போன்கள் மட்டுமே வருகின்றன. 4ஜி வேரியண்ட்கள் கிடையாது. சீனா மற்றும் ஐரோப்பிய மார்கெட்டுகளுக்கு பிறகு இங்கு வெளியாகும்.


Click it and Unblock the Notifications








