Home
Mobile

ஆட்டம் காணும் மார்கெட்.. வெறும் ரூ.17320 போதும்.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?

வெறும் ரூ.17,320 விலையில் 200எம்பி கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, 5100mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் ஜென் 2 சிப்செட், 67W சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 13 ப்ரோ (Redmi Note 13 Pro) போனுக்கு இந்தியாவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ அம்சங்கள் (Redmi Note 13 Pro Specifications): இந்த போன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

வெறும் ரூ.17320 போதும்.. 200MP கேமரா.. 5100mAh பேட்டரி.. எந்த மாடல்?

அதோடு டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோ மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் ( Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

ஆண்ட்ராய்டு 13 மற்றும் எம்ஐயூஐ 14 ஓஎஸ் கொண்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி ஆகிய 4 வேரியண்ட்கள் இருக்கின்றன. இந்த போனில் பிரம்மாண்டமான கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சாருடன் கூடிய 200 எம்பி மெயின் கேமரா வருகிறது. இதுவொரு ஓஐஎஸ் (OIS) கேமராவாகும். அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் கூடிய 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் ஆம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivsion OV02B10) சென்சாருடன் கூடிய 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

அதேபோல ஆம்னிவிஷன் ஓவி16ஏ1க்யூ (Omnivision OV16A1Q) சென்சார் கொண்ட 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ மாடலில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி வருகிறது.

மிட்நைட் டார்க், டைம் ப்ளூ, ஷாலோ ட்ரீம் மற்றும் ஸ்டார் சாண்ட் ஒயிட் ஆகிய நான்கு கலர்களில் விற்பனைக்கு வரவிருக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 17,320ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.18,190ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,785ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,100ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி முதல விற்பனைக்கு வருகிறது. இதன் பிரீ-ஆர்டர் சீன மார்கெட்டையே வியக்க வைத்திருக்கிறது. இதனால், இந்தியாவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு கிளம்பிவிட்டது. இதன் குளோபல் வேரியண்ட் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தியாவில் அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்த போனோடு ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலும் விற்பனைக்கு வருகிறது. இதன் பெரும்பாலான அம்சங்கள், ப்ரோ மாடலில் வருவதை போலவே இருக்கின்றன. இருப்பினும், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200-அல்ட்ரா 4என்எம் சிப்செட் மற்றும் மாலி-ஜி610 எம்சி4 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு மாறுபடுகிறது.

அதேபோல 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh வருகிறது. இதன் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 23,100ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மாடலின் விலை ரூ.26,150ஆகவும் இருக்கிறது. இந்த 2 போன்களும் பட்ஜெட் விலையில் மிகவும் பிரீமியம் அம்சங்களை கொண்டிருப்பதால், இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 Pro 200MP Camera, 16GB RAM Sale in China From September 26 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X