ஜன.4 முதல்.. நிக்காம ஆர்டர் விழப்போகுது.. நினைச்சு பார்க்காத விலை.. Redmi Note 13 சீரிஸின் 3 புதிய 5G போன்கள்!
இந்தியாவில் ரெட்மி (Redmi) என்கிற நிறுவனத்தை "செங்குத்தாக தூக்கி நிறுத்தியதே" நோட் சீரீஸ் (Note Series) ஸ்மார்ட்போன்கள் தான் என்று கூறினால் அது மிகையாகாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த மொபைல் போன் சீரீஸிகளில்.. ரெட்மி நோட் சீரிஸிக்கு எப்போதுமே ஒரு இடமுண்டு!
கடந்த ஆண்டு ரெட்மி நோட் 12 சீரீஸின் கீழ் அறிமுகமான 3 மாடல்களுமே தாறுமாறான விற்பனையை சந்தித்தன. அந்த வரிசையில் ரெட்மி நோட் 13 சீரிஸ் ஜனவரி 4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாக உள்ளன. இதன்கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

ரெட்மி நோட் 13 சீரீஸின் கீழ் என்னென்ன மாடல்கள் அறிமுகமாகும்? மொத்தம் 3 மாடல்கள்! ரெட்மி நோட் 13 5ஜி ( Redmi Note 13 5G), ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G) மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro Plus 5G).
ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கும், மற்றும் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.28,999 க்கும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.32,999 க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை: பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.33,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.35,999 க்கும், மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

மேற்கண்ட விலைகளில் சில மாற்றங்களையும் நாம் எதிர்பார்க்கலாம். இம்மூன்று ரெட்மி நோட் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சரியான இந்திய விலை விவரங்கள் 2024 ஜன.4 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடக்கும் வெளியீட்டு நிகழ்வின் போது அறிவிக்கப்படும். அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
சிப்செட்டில் உள்ள வேறுபாடுகள்: ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 6080 (MediaTek Dimensity 6080) சிப்செட்டை பேக் செய்யும். ப்ரோ மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 7s Gen 2 SoC) இடம்பெறும். ப்ரோ பிளஸ் மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா (MediaTek Dimensity 7200 Ultra) சிப்செட் இருக்கும்.
கேமராக்களில் உள்ள வேறுபாடுகள்: ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனில் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும். ப்ரோ மாடலிலும் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் இருக்கும். ஆனால், மெயின் கேமராவாக 200எம்பி சென்சார் பேக் செய்யப்படும். இதே கேமராத்தான் ப்ரோ பிளஸ் மாடலிலும் இருக்கும்.
பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கில் உள்ள வேறுபாடுகள்: ரெட்மி நோட் 13 5ஜி மாடலில் 33W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி இருக்கும். ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி மாடலில் 67W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5100mAh பேட்டரி இருக்கும். ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் 120W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி இருக்கும்.


Click it and Unblock the Notifications








