ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.13,640 போதும்.. 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
மலிவான விலையில் 108 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 12ஜிபி ரேம், 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்காவான அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 (Redmi Note 13) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விற்பனை மற்றும் விலை விவரங்கள் இதோ.
ரெட்மி நோட் 13 அம்சங்கள் (Redmi Note 13 Specifications): இந்த ரெட்மி மாடல் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது. இந்த ரெட்மி நோட் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் வருகிறது.
அதோடு எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் மற்றும் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.
அதேபோல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் இருக்கிறது. அதோடு மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் வருகிறது. இந்த போன் டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. அதோடு எல்இடி பிளாஷ் லைட் இடம் பெற்றுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) வருகிறது.
3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி போனில் சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) இருக்கிறது. இதில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), 5ஜி எஸ்ஏ (5G SA), டூயஸ் 4ஜி (Dual 4G), வை-பை 802 (Wi-Fi 802) போன்ற கனெக்டிவிட்டி சப்போர்ட் வருகிறது.
சாண்ட் ஒயிட் (Sand White), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் டைம் ப்ளூ (Time Blue) ஆகிய கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 6ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,640ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,005ஆகவும், 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,315ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.19,625ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனைக்கு வந்துவிட்டது. அடுத்த சில வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கும் இந்த போனின் ஆரம்ப விலை ரூ.13,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications