அதிருது பட்ஜெட்.. வெறும் ரூ.13,640 போதும்.. 108MP கேமரா.. 1TB மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
மொத்த மார்கெட்டும் திரும்பி பார்க்கும் பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா, 1 டிபி மெமரி சப்போர்ட், அமோலெட் டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 (Redmi Note 13) விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த போனானது, சீனாவில் விற்பனைக்கு வந்து, மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் மற்ற நாடுகளில் எதிர்பார்ப்பு கிளம்பிய நிலையில், தாய்லாந்தின் என்பிடிசி, சிங்கப்பூரின் ஐஎம்டிஏ மற்றும் இந்தியாவின் பிஐஎஸ் சான்றிதழ் பெற்றுவிட்டது. இப்போது, யுஏஇயின் டிசிஆர்ஏ (TDRA) சான்றிதழும் பெற்றுள்ளது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்ப்போம்.

ரெட்மி நோட் 13 அம்சங்கள் (Redmi Note 13 Specifications): இந்த ரெட்மி நோட் 13 மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS), எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் மற்றும் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 இன்ச் புல்எச்டி பிளஸ் (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு சூப்பர் அமோலெட் டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1920Hz டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வருகிறது.
இந்த ரெட்மி போனில் நான்கு மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. ஆகவே, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ஆகிய வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 1 டிபி வரையில் மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தலாம். இந்த ரெட்மி போனில் மிரட்டலான 108 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் வருகிறது. இந்த கேமராவோடு எல்இடி பிளாஷ் லைட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.
கேமராவை போலவே மிரட்டலான பேட்டரி செட்டப் கொண்டுள்ளது. அந்த வகையில், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. டூயல் நானோ சிம், எஸ்டி கார்டு சிலாட் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரெட்மி போனின் கனெக்டிவிட்டியை பார்த்தால், ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் வை-பை 802 வருகின்றன. அதோடு 5ஜி எஸ்ஏ (5G SA), டூயல் 4ஜி (Dual 4G) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் சாண்ட் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் டைம் ப்ளூ ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன.

இந்த போனின் விலையை பொறுத்தவரை, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.13,640க்கும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.15,005க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.17,315க்கும் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.19,625ஆகவும் இருக்கிறது.
இந்த விலை சீனாவில் நிர்ணயிக்கப்பட்ட விலையாகும். இதே விலையில் மற்ற நாடுகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. முன்னதாக, இந்த போன் போகோ எக்ஸ்6 நியோ என்ற பெயரில் இந்தியாவில் ரீபிராண்ட் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ரெட்மி நோட் 13ஆர் ப்ரோ மாடலே போகோ எக்ஸ்6 நியோவாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது.


Click it and Unblock the Notifications








