அப்படி போடு.. 108எம்பி கேமரா.. 256ஜிபி மெமரி.. இந்தியாவுக்கு வருகிறது ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது BIS சான்றிதழ் தளத்தில் ரெட்மி நோட் 13 5ஜி போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த ரெட்மி நோட் 13 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்.
BIS சான்றிதழ் தளத்தில் ரெட்மி நோட் 13 5ஜி போன் ஆனது 2312DRAABG/I என்ற மாடல் எண்ணுடன் காணப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் புல்எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே உடன் இந்தியாவில் அறிமுகமாகும். மேலும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது.
எனவே இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant) கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். பின்பு சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வசதியுடன் இந்தியாவுக்கு வரும் ரெட்மி நோட் 13 5ஜி மாடல்.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் மாலி - ஜி57 எம்சி2 ஜிபியு (Mali-G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம். அதாவது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்கும் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன்.
எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் சார்ந்த அண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் ரெட்மி நோட் 13 5ஜி போன் இந்தியாவில் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். மேலும் சாண்ட் ஒயிட் (Sand White), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் டைம் ப்ளூ (Time Blue) நிறங்களில் இந்த போன் அறிமுகமாகும்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஆகிய மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) கொண்டுள்ளது இந்த ரெட்மி போன்.
5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), வை-பை 802 (Wi-Fi 802) போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரெட்மி நோட் 13 5ஜி போன் ஆனது இந்தியாவில் ரூ.13,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








