Home
Mobile

இந்தியர்களின் அடங்காத ஆர்டர்.. மூன்றே நாளில் ரூ.1000 கோடி வருமானம்.. ரெட்மி 13 சீரிஸ்ல அப்படியென்ன இருக்கு?

இந்தியாவில் மிகப்பெரும் நடிகர்களின் படங்களே ரூ.1,000 கோடியை தொட பல வாரங்களில் எடுக்கும் வேளையில் ஒரு சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்த மூன்றே நாளில் ரூ.1000 கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது. இவ்வளவு வரவேற்பு பெறவதற்கு அப்போன்களில் அப்படியென்ன இருக்கிறது?

இந்த ரெட்மி நோட் 13 சீரிஸ் (Redmi Note 13 5G Serie) போன்கள் ஜனவரி 10ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. சியோமி இந்தியா (Xiaomi India) மட்டுமல்லாமல், அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) போன்ற முன்னணி ஆன்லைன் தளங்களிலும், இதர ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இவற்றின் விற்பனை கலைகட்டி வருகிறது.

இந்தியர்களின் அடங்காத ஆர்டர்.. மூன்றே நாளில் ரூ.1000 கோடி வருமானம்!

இருப்பினும், இவ்வளவு பிரம்மாண்ட வரவேற்பா? என்று சியோமி இந்தியா நிறுவனமே வியந்துபோகும் அளவுக்கு வெறும் மூன்றே நாட்களில் அதன் விற்பனை நிலவரங்கள் சாதனை படைத்துள்ளன. ஜனவரி 10ஆம் தேதியில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில் மட்டும் ரூ.1000 கோடிக்கான வருமானத்தை அந்த போன்கள் பெற்று தந்துள்ளன.

இந்த வரவேற்புக்கு காரணமாக அந்த போன்களின் ஹை-குவாலிட்டி டிஸ்பிளே, பிரீமியம் குவாலிட்டி கேமரா, அதிவேக ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை மட்டுமே முக்கிய காரணமாக இருக்கிறது. அதோடு பட்ஜெட்டில் விலை நிர்ணயம் இருந்ததால், இந்தியர்களின் நன்மதிப்பை பெற்றுவிட்டது. இந்த போன்களின் அம்சங்கள் விலை, விவரங்கள் இதோ.

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள், விலை (Redmi Note 13 5G Specifications Price): இந்த போனில் 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் சிப்செட் உள்ளது. 108 எம்பி மெயின் கேமரா + 5 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதன் 6ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.17,999ஆகவும், 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.19,999ஆகவும், 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.21,999ஆக இருக்கிறது. ரூ.1000 தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி அம்சங்கள், விலை (Redmi Note 13 Pro 5G Specifications Price): 6.67 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் சிப்செட் வருகிறது. 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டுள்ளது.

இந்தியர்களின் அடங்காத ஆர்டர்.. மூன்றே நாளில் ரூ.1000 கோடி வருமானம்!

67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5100mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 8ஜிபி + 128ஜிபி மாடலின் விலை ரூ.25,999ஆகவும், 8ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.27,999ஆகவும், 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.29,999ஆகவும் உள்ளது. ரூ.2000 தள்ளுபடியில் விற்பனையாகிறது.

ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள், விலை (Redmi Note 13 Pro Plus 5G Specifications Price): மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் சிப்செட் வருகிறது. 6.67 இன்ச் அமோலெட் கர்வ்ட் டிஸ்பிளே கொண்டுள்ளது. 200 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இந்தியர்களின் அடங்காத ஆர்டர்.. மூன்றே நாளில் ரூ.1000 கோடி வருமானம்!

இந்த போனில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இதன் 8ஜிபி + 256ஜி மாடலின் விலை ரூ.31,999ஆகவும், 12ஜிபி + 256ஜிபி மாடலின் விலை ரூ.33,999ஆகவும், 12ஜிபி + 512ஜிபி மாடலின் விலை ரூ.35,999ஆகவும் இருக்கிறது. ரூ.2000 தள்ளுபடி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 13 5G Series Sales Hits Rs 1000 Crores in India Since on January 10 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X