தெறிக்குது ஆர்டர்.. ரூ.6000 விலை குறைப்பு.. 120Hz டிஸ்பிளே, 12GB ரேம், 108MP கேம், IP54 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய சந்தையில் ரெட்மி நிறுவனத்தின் புகழ் பட்டித்தொட்டி எங்கும் பரவ முக்கிய காரணம் - இந்நிறுவனத்தின் நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் தான். ரெட்மியின் நோட் சீரிஸ்க்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. அப்படியான நோட் சீரீஸின் கீழ் 3 புதிய ரெட்மி நோட் 14 சீரிஸ் மாடல்கள் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் பழைய ரெட்மி நோட் 13 5ஜி மாடல் மீது அபாரமான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது க்கோரமட்டிக் பர்பிள் (Chromatic Purple) கலர் ஆப்ஷனில் வரும் ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் 30% நேரடி தள்ளுபடியை பெற்று அசல் விலையான ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,703 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக 10% இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரும் கிடைக்கிறது.

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின், கொரில்லா கிளாஸ் 3 உடனான 6.79-இன்ச் எப்எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது சாம்சங் ஐசோசெல் எச்எம்6 சென்சார் மற்றும் எப்/1.75 அபெக்ஷர் உடன் கூடிய 108 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இது 3x இன்-சென்சார் ஜூமிங்கை வழங்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5030mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.
இன்னும் சில தினங்களில், ரெட்மி 1நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் சற்றே பழைய ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இந்த சந்தேகம் உங்களுக்கு இருந்தால்.. இந்த ஸ்மார்ட்போனை ஏன் வாங்கலாம் என்பதற்கான 4 காரணங்கள் இதோ:
முதலாவது காரணம் - இது ஸ்மூத் ஆன 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இரண்டாவது காரணம் - இது ஈர்க்கக்கூடிய செயல்திறனை வழங்குகிறது. மூன்றாவது காரணம் - பகல் நேரங்களில் இதன் கேமராக்கள் நல்ல அவுட்புட்களை வழங்குகிறது. நான்காவது காரணம் - இது டீசன்ட் ஆன பேட்டரி லைஃப்பை வழங்குகிறது.
புதிதாக வரும் ரெட்மி நோட் 14 சீரீஸின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? வெண்ணிலா ரெட்மி நோட் 14 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.12,990 முதல் தொடங்கலாம். அடுத்ததாக உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ மாடல் ரூ.16,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். கடைசியாக உள்ள ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் வேரியண்ட் ஆனது ரூ.22,990 க்கு வெளியாகலாம்.
ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் என்னென்ன முக்கிய அம்சங்களை எதிர்பார்க்கலாம்? அனைத்து மாடல்களுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். வெண்ணிலா வேரியண்ட் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா சிப்செட்டை பேக் செய்யும். ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் ஆகியவைகள் முறையே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 மற்றும் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட்களால் இயக்கப்படும்.
கேமராக்களை பொறுத்தவரை ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் ஆகிய இரண்டுமே ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். அதில் 50எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 8எம்பி அல்ட்ராவைட் கேமரா இருக்கும். முக்கிய வேறுபாடாக ப்ரோ பிளஸில் 50எம்பி போர்ட்ரெய்ட் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறும்; ப்ரோவில் 2எம்பி மேக்ரோ கேமரா இடம்பெறும்.
கடைசியாக பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் மாடல் ஆனது 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 6200mAh பேட்டரியை கொண்டிருக்கும். ரெட்மி நோட் 14 ப்ரோ மாடல் ஆனது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான சற்றே சிறிய 5500mAh பேட்டரியை கொண்டிருக்கும். தற்போது வரையிலாக ரெட்மி நோட் 14 சீரீஸின் சரியான இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை; இவைகள் அடுத்த சில தினங்களில் அல்லது டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications