அள்ளி வழங்கும் அமேசான்.. ரூ.15,290 பட்ஜெட்ல 108MP கேமரா.. 33W சார்ஜிங்.. ஆஃபரில் Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் 2024 (Amazon Great Indian Festival Sale 2024) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் 108MP கேமரா, 33W சார்ஜிங் கொண்ட ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,290 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். எனவே இந்த ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்.

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 5G Specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLEDடிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. 1080x2400 பிக்கசல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ஆக்டோ-கோர் 5ஜி (Mediatek Dimensity 6080 6nm Octa-core 5G) சிப்செட் உடன் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
108எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் . எனவே இந்த ரெட்மி நோட் 13 5ஜி போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன்.
இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல சாண்ட் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் டைம் ப்ளூ ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகிறது இந்த ரெட்மி நோட் 13 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறுகிறது சியோமி நிறுவனம். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரெட்மி போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








