மிரளுது பட்ஜெட்.. வெறும் ரூ.15,000 போதும்.. 108MP கேமரா.. 1TB மெமரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?
இந்தியாவில் ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் போன்கள் வெளியாக இருக்கும் வேளையில், ரெட்மி நோட் 13 4ஜி போனின் அம்சங்கள் கசிந்து மார்கெட்டை அதிர வைத்துள்ளது. வெறும் ரூ.15,000 பட்ஜெட்டில் 108எம்பி கேமரா, 1டிபி மெமரி போன்ற அம்சங்கள் வருகிறது.
ரெட்மி நோட் 13 4ஜி அம்சங்கள் (Redmi Note 13 4G Specifications): இந்த ரெட்மி நோட் போனில் எம்ஐயுஐ 14 (MIUI 14) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 685 6nm Mobile) சிப்செட் வருகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் கேமிங் பிரியர்களுக்கான அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வர இருக்கின்றன. அதோடு 6 மற்றும் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் வருகிறது. மேலும், 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது. ஆகவே, எஸ்டி கார்டு சிலாட் மற்றும் டூயல் நானோ சிம் சிலாட் வருகிறது.
இந்த ரெட்மி போனில் 6.67 இன்ச் (1080× 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி+ (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் , 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு 960Hz PWD டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி நோட் 13 4ஜி போன் பட்ஜெட் விலையிலும் மிரட்டலான டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொண்டுள்ளது. 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.

இந்த கேமராவில் 3X ஜூமிங் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது. அதேபோல 16 எம்பி செல்பீ கேமராவானது, 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்டுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. டால்பி அட்மோஸ் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.
அதேபோல 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது. இந்த போனில் 33W டர்போ சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP54 தர ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ரெட்மி நோட் 13 4ஜி போனில் டூயல் 4ஜி கனெக்விட்டி வருகிறது.
அதேபோல வை-பை 5, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.15,000 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,000 பட்ஜெட்டிலும் நிர்ணயம் செய்யப்படும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த போன் பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் கிரீன் (Green) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ஏற்கனவே, இந்த கலர்களில் போட்டோக்கள் கசிந்துள்ளன. இப்போது, முழு அம்சங்களும் கசிந்து மார்கெட் வட்டாரங்களை அதிர வைத்துள்ளது. இந்த போன் ஜனவரியில் சீனாவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
அதன்பிறகு இந்தியாவில் வெளியாகலாம். சொல்லப்போனால், இந்த ரெட்மி நோட் 13 4ஜி போனானது, ஏற்கனவே இந்தியாவின் பிஐஎஸ் (BIS) சான்றிதழுக்கு வந்துவிட்டது. ஆகவே, வரும் ஜனவரி 4ஆம் தேதியில் வெளியாகும் ரெட்மி நோட் 13 5ஜி மாடல்களுக்கு பிறகு இந்த 4ஜி சீரிஸ் போன்களின் வெளியிட்டு நிகழ்வு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Click it and Unblock the Notifications








