ஃபயரு பட்ஜெட்.. வெறும் ரூ.18045 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெறும் ரூ.18045 பட்ஜெட்டில் 108 எம்பி கேமரா, 12 ஜிபி ரேம், அமோலெட் டிஸ்பிளே, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பட்டையை கிளப்பும் அம்சங்களுடன் ரெட்மி நோட் 13 4ஜி (Redmi Note 13 4G) போன் வெளியாக இருக்கிறது.
ரெட்மி நோட் 13 4ஜி அம்சங்கள் (Redmi Note 13 4G Specifications): இந்த ரெட்மி போனில் 6.67 இன்ச் (1080× 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி+ (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளேவாகும்.

இந்த டிஸ்பிளேவுக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 685 6nm Mobile) சிப்செட் வருகிறது.
அதோடு எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேமிங் பிரியர்கள் விரும்பும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் இருக்கின்றன.
இந்த 6 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 6 ஜிபிக்கான டைனாமிக் ரேமும், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் கூடுதலாக 8 ஜிபிக்கான டைனாமிக் ரேமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13 4ஜி போனில் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, 108 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. அதோடு எல்இடி ஃபிளாஷ் மற்றும் 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரெட்மி போனில் டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது.
அதேபோல 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13 4ஜி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து 187 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இந்த போனில் டூயல் 4ஜி, வை-பை 802, ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் ஆகிய கனெக்டிவிட்டி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் கிரீன் (Green) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,045ஆக இருக்கிறது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,575ஆக இருக்கிறது. இந்த விலை மற்றும் அம்சங்கள் ஐரோப்பிய மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆகவே, அங்கு முதலில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த போன் ஏற்கனவே இந்தியாவின் பிஐஎஸ் (BIS) சான்றிதழுக்கு வந்திருக்கிறது. ஆகவே, வரும் ஜனவரியில் இங்கும் வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








