மார்கெட் காலி.. ரூ.14,830 பட்ஜெட்ல 108MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 1TB மெமரி.. எந்த மாடல்?
108எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, 1டிபி மெமரி, 33W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட ரெட்மி நோட் 13 4ஜி (Redmi Note 13 4G) போன் ரூ.14,830 பட்ஜெட்டில் அறிமுகமாகியிருக்கிறது.
ரெட்மி நோட் 13 4ஜி அம்சங்கள் (Redmi Note 13 4G Specifications): இந்த ரெட்மியில் 6.67 இன்ச் (1080× 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி+ (FHD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் (Supper AMOLED) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது. இந்த ரெட்மி 4ஜி போனில் எம்ஐயுஐ 14 (MIUI 14) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 685 6nm Mobile) சிப்செட் வருகிறது.
அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13 4ஜி போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வருகின்றன. அதோடு 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் மாடலில் 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் மற்றும் ஹைபிரிட் டூயல் நானோ சிம் சிலாட் கொண்டிருக்கிறது. அதோடு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட ஸ்டீரீயோ ஸ்பீக்கர்கள் வருகின்றன.
இந்த ரெட்மி நோட் 13 4ஜி போனில் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) கொண்டிருக்கிறது.
இந்த கேமராவில் 3X இன்-சென்சார் ஜூமிங் சப்போர்ட் உள்ளது. அதோடு 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் உள்ளது.

16 எம்பி செல்பீ வருகிறது. இந்த போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) வருகிறது. அதோடு IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த ரெட்மி நோட் 13 4ஜி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு டைப்-சி போர்ட் வருகிறது. 188.5 கிராம் எடை மற்றும் 7.97 கிராம் தடிமன் கொண்டிருக்கிறது. இதுவொரு 4ஜி வேரியண்ட் என்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்விட்டி வருகிறது. அதோடு வை-பை 802.11, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி ஆகிய கனெக்டிவிட்டிகளும் வருகின்றன.
இந்த போனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), மின்ட் கிரீன் (Mint Green), ஐஸ் ப்ளூ (Ice Blue) மற்றும் ஓஷன் சன்செட் (Ocean Sunset) ஆகிய 4 கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,830ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது..
அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 16,590ஆக இருக்கிறது. இப்போது, தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் போன்கள் வெளியாகி இருப்பதால், இந்த 4ஜி வேரியண்ட்டும் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே, அடுத்த சில வாரங்களில் அறிமுகம் செய்யப்பட்டலாம்.


Click it and Unblock the Notifications








