Home
Mobile

இதை யாருமே எதிர்பார்க்கல! கம்மி விலையில் அறிமுகமானது Redmi நோட் 12ஆர் போன்.! தரமான சிப்செட்..

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த புதிய ரெட்மி நோட்12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அதேபோல் உலகின் முதல் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் உடன் இந்த ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் இந்த அசத்தலான ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன். மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

கம்மி விலையில் அறிமுகமானது Redmi நோட் 12ஆர் போன்.! தரமான சிப்செட்..

ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன் ஆனது 6.79-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. ஃபுல் எச்டி டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

கம்மி விலையில் அறிமுகமானது Redmi நோட் 12ஆர் போன்.! தரமான சிப்செட்..

குறிப்பாக இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் உடன் அட்ரினோ ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டு இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கம்மி விலையில் அறிமுகமானது Redmi நோட் 12ஆர் போன்.! தரமான சிப்செட்..

AI ஃபேஸ் அன்லாக்,3.5MM ஹெட்ஃபோன் ஜாக், டூயல் சிம் கார்டு ஸ்லாட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். பின்பு ரெட்மி நோட் 12ஆர் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை RMB 999 (இந்திய மதிப்பில் ரூ.11,300). குறிப்பாக மிட்நைட் பிளாக், டைம் ப்ளூ மற்றும் ஸ்கை ஃபேண்டஸி நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 12R launched with Snapdragon 4 Gen 2 at low price: Check Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X