தெறி ஆர்டர்.. டக்குனு ரூ.3600 கட்.. ரூ.11399 போதும்.. 50MP கேமரா.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
சாம்சங் சென்சார் கொண்ட 50 எம்பி கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 1 டிபி மெமரி சப்போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி போன்ற அட்டகாசமான அம்சங்களை கொண்ட ரெட்மி நோட் 12 (Redmi Note 12) போனுக்கு ரூ.2000 விலைக்குறைப்பு உடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 12 அம்சங்கள் (Redmi Note 12 Specifications): இந்த ரெட்மி போன் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி மாடலில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 685 6என்எம் (Octa Core Snapdragon 685 6nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) மற்றும் எம்ஐயுஐ 14 (MIUI 14) ஓஎஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த போன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அதோடு 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, டூயல் நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் இடம் பெற்றுள்ளது.
இந்த ரெட்மி நோட் போன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. ஆகவே, சாம்சங் ஜேஎன்1 (Samsung JN1) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு ஓம்னிவிஷன் ஓவி08டி (Omnivision OV08D) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. இந்த மெயின் கேமராவோடு எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது.
13 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) மற்றும் சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வருகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் இருக்கிறது.
இந்த ரெட்மி போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பொறுத்தவரை, டூயல் 4ஜி (Dual 4G), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ரெட்மி நோட் 12 போன் லூனார் பிளாக் (Lunar Black), சன்ரைஸ் கோல்டு (Sunrise Gold) மற்றும் ஐஸ் ப்ளூ (Ice Blue) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையில், இப்போது ரூ.2000 அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போனை பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.
இதற்கு பேங்க் ஆஃபரும் கிடைக்கிறது. இந்த போனை ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்தால், ரூ.1,600 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.2000 விலை குறைப்பு, ரூ.1,600 டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.11,399க்கு இந்த போனை வாங்கிக் கொள்ள முடியும். நல்ல கேமரா மற்றும் பேட்டரி பேக்கப் கொண்டபோன் மலிவான விலையில் வேண்டும் என்றால், இந்த ரெட்மி நோட் 12 மாடல் சிறந்த தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








