Home
Mobile

5G ஸ்பீடு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Redmi.! விலை எவ்வளவு தெரியுமா?

ரெட்மி நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன்

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன்

குறிப்பாக இந்த புதிய போன் சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த புதிய Redmi Note 12 Pro Speed Edition விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1080x2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆண்ட்ராய்டு 12

ஆண்ட்ராய்டு 12

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் மாடலில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிரான் 778ஜி பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் ஆனது 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் மிட்நைட் பிளாக், புளூ மற்றும் ஷிம்மர் கிரீன் நிறங்களில் இந்த புதிய போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில்சார்ஜ் செய்துவிட முடியும்.

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் விலை

ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன் விலை

5 ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக், சூப்பர் லீனியர் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்பீடு எடிஷன். மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை CNY 1,699 (இந்திய மதிப்பில் ரூ.20,200) ஆக உள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Redmi Note 12 Pro Speed Edition launched with 108MP camera priced at Rs 20,200: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X