Redmi நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை அதிரடியாக குறைப்பு.! ஆளுக்கொரு போன் பார்சல்.!.
ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் மற்ற நிறுவனங்களின் போன்களை விட ரெட்மி நிறுவனத்தின் போன்கள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பிரபலமான ரெட்மி ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரெட்மி நோட் 12 ப்ரோ (Redmi Note 12 Pro) ஸ்மார்ட்போனுக்கு தான் தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ ரூ.24,999-விலையில் அறிமுகமானது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.26,999-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.27,999-விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.23,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலுக்கு ரூ.2000 விலைகுறைக்கப்பட்டு ரூ.24,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசியாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ மாடலுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.26,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் இப்போது இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 1080x2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன் உள்ளிட்ட பல அசத்தலான டிஸ்பிளேஅம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான டிஸ்பிளே அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் பிராசஸர் (MediaTek Dimensity 1080 6nm processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு 2.6ஜிகாஹெர்ட் கார்டெக்ஸ்-ஏ78 கோர்ஸ் (2.6GHz Cortex-A78 cores) மற்றும் மாலி-ஜி68 ஜிபியு (Mali-G68 MC4 GPU) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி போன்.
6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த சாதனம். ஆனால் கூடிய விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கெர்டுக்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








