Just In
- 3 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 4 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 4 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 5 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- News
‛ஆங்கிலேயர் அட்ராசிட்டினு’ ஏன் படம் எடுக்கல? பிபிசி ஆவணப்படத்தால் கொதித்த கேரளா ஆளுநர்.. ஆக்ரோஷம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
200 MP கேமராவுடன் கெத்தாக என்ட்ரி கொடுக்கும் Redmi Note 12 Pro Plus.! விலை இவ்வளவு கம்மியா?
Redmi Note 12 Pro Plus: சமீபத்தில் சியோமிக்கு (Xiaomi) சொந்தமான ரெட்மி (Redmi) நிறுவனம் சீனாவில் Redmi Note 12 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதற்குப் பின்னர், Xiaomi சமீபத்திய Redmi Note தொடர் வரிசையில் - Redmi Note 12, Redmi Note 12 Pro மற்றும் Redmi Note 12 Pro Plus ஆகியவற்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் இது மிக விரைவில் களமிறங்கவுள்ளது. Xiaomi இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் Redmi Note 12 Pro+ ஐ அறிமுகப்படுத்தும்.

Redmi Note 12 Pro+ போனில் கம்மி விலையில் 200 MP கேமராவா?
டிப்ஸ்டர் முகுல் சர்மா, தனது சமீபத்திய ட்வீட்டில் கூறியதாவது, "Redmi Note 12 தொடர் விரைவில் இந்தியாவிற்கு வரவுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறோம். Redmi Note 12 Pro+ இன் இந்திய வேரியண்ட் மாடல் 200MP பிரைமரி கேமராவைக் கொண்டிருக்கும்." என்று ட்வீட் செய்துள்ளார். இந்த வரவிருக்கும் போனின் விலை மற்றும் மற்ற சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி நோட் 12 5ஜி சிறப்பம்சம்
ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) சீன வேரியண்ட் மாடல் 6.67' இன்ச் பிளாட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
இது முழு-HD+ தெளிவுத்திறன் மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட் வீதத்துடன் கூடிய பஞ்ச்-ஹோல் AMOLED பேனல் உடன் வருகிறது.
இது 48MP பிரைமரி லென்ஸ் மற்றும் 2MP டெப்த் யூனிட்டுடன் பின்புறத்தில் டூயல் கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி எடுக்க 8எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான சிப்செட் உடன் 5 ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்கள்
இது ஒரு புதிய குவால்காம் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது Snapdragon 4 Gen 1 SoC ஐக் கொண்டுள்ளது, இது 6nm ஃபேப்ரிகேஷன் செயல்முறையின் அடிப்படையில் ஆக்டா-கோர் சிப்செட் ஆகும்.
இந்த சாதனம் வெவ்வேறு ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது 4GB + 128GB, 6GB + 128GB, 8GB + 128GB, மேலும் 8GB + 256GB வேரியண்ட் உடன் வருகிறது.

சூப்பர் பாஸ்ட் வேகத்தில் சார்ஜ் ஆகும் பெரிய சைஸ் பேட்டரி.!
இந்த சாதனம் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 12 OS இல் துவங்குகிறது மற்றும் 33W வேகமான சார்ஜிங்கைக் கொண்டுள்ளது.
பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டு கைரேகை ஸ்கேனர் மற்றும் பேஸ் அன்லாக் அம்சத்தையும் இது ஆதரிக்கிறது. இது சார்ஜ் செய்ய USB Type-C போர்ட் மற்றும் இசை கேட்பதற்கு 3.5mm ஹெட்ஃபோன் ஜாக்கை கொண்டுள்ளது. இது சாதராண ப்ரோ வேரியண்ட் மாடலின் விபரங்கள் ஆகும்.

Redmi Note 12 Pro+ 5G இல் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்.!
Redmi Note 12 Pro+ 5G மாடல் 6.67' இன்ச் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் வீதம் கொண்ட OLED பேனல் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த பேனல் 10-பிட் கலர் டெப்த் மற்றும் HDR10+ ஆதரவைக் கொண்டுள்ளது.
இது டால்பி விஷன் ஆதரவையும் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 200MP ISOCELL HPX ப்ரைமரி லென்ஸ் உடன் வரும்.

தரமான கேமராவுடன் இந்தியாவிற்குள் களமிறங்க ரெடி.!
இது தவிர இந்த சாதனம், 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ லென்ஸ் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டு வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இரண்டு மாடல்களிலும் உள்ள முக்கிய லென்ஸ் 1/1.4-இன்ச் வகை சென்சார் ஆகும். மூன்றும் நிலையான வீடியோ பதிவுக்கான OIS ஆதரவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பக்கத்தில் இந்த டிவைஸ் 16MP செல்ஃபி ஸ்னாப்பரை கொண்டிருக்கும்.

?என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?
சீனாவில், Redmi Note 12 Pro+ 5G ஆனது 8GB+12GB RAM விருப்பங்களுடன் கிடைக்கிறது. இதன் விலை CNY 2199 ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 25,988 என்ற விலை வரம்பில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் இதே போன்ற விலை வகைகளில் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்த ஆண்டின் இறுதி, அல்லது அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470