நமக்கு இந்த பொங்கல் Redmi பொங்கல்: சும்மா 200எம்பி கேமரா வச்சு வளச்சு வளச்சு போட்டோ எடுங்க.!
ரெட்மி நிறுவனம் வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு ஒரு அருமையான மற்றும் தரமான கேமரா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் ஜனவரி 5-ம் தேதி ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ்
குறிப்பாக இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஆனது 200எம்பி கேமராவுடன் வெளிவரும். எனவே இந்த பொங்கல் பண்டிகைக்கு நமது கிராமங்களில் நடைபெற இருக்கும் சிறப்பு விழாக்களை இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ ஸமார்ட்போன் கேமராவின் உதவியுடன் தரமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

5ஜி ஆதரவு..
அதேபோல் 200எம்பி கேமராவை கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இது 5ஜி ஆதரவுடன் வெளிவருகிறது. எனவே நாம் 5ஜி சேவையை பயன்படுத்த இந்த போன் மிக அருமையாக உதவும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

டால்பி விஷன்..
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு டால்பி விஷன்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

Dimensity 1080 சிப்செட் வசதி
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் Dimensity 1080 சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். அதாவது இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தி உதவுகிறது இந்த Dimensity 1080 சிப்செட்.

16எம்பி கேமரா...
புதிய ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் அறிமுகமாகும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு..
ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications