வாங்குனா.. சும்மா படம் காட்டலாம்.. 12GB ரேம்.. OLED டிஸ்பிளே.. SONY சென்சார் கேமரா.. எந்த மாடல்?
மிட்-ரேஞ்ச் விலையில் 12ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே, டால்பி விஷன், சோனி சென்சார் கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் ரெட்மி நோட் 12 ப்ரோ போனின் புதிய மாடல் அறிமுகமாகியிருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.
ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Redmi Note 12 Pro 5G Specifications): இந்த ரெட்மி நோட் போன் 6.67 இன்ச் (1080×2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

அதோடு டிசிபி-பி3 (DCI-P3) கலர் காமட், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10பிளஸ் (HDR10+) சப்போர்ட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு வருகிறது. ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மற்றும் எம்ஐயுஐ 13 ஓஎஸ் (MIUI 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 1080 6nm) சிப்செட் வருகிறது.
அதோடு மாலி - ஜி68 எம்சி4 ஜிபியு (Mali-G68 MC4 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று மூன்று மாடல்களில் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இப்போது, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த போன் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. அந்த வகையில், சோனி ஐஎம்766 (Sony IM766) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது.
மேலும், சைடு மவுண்டெட் பிங்கர் பிரிண்ட் சென்சார், இன்ஃபிராரெட் சென்சார், IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், சூப்பர் லைனர் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சப்போர்ட், ப்ளூடுத் 5.2 டைப் - சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன.
இந்த ரெட்மி போன் ஸ்டார்டஸ்ட் பர்பிள் (Stardust Purple), ஃப்ரோஸ்டட் ப்ளூ (Frosted Blue) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.26,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்போது, அறிவிக்கப்பட்டுள்ள 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 28,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய மாடலை பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் எம்ஐ.காம் (mi.com) தளங்களில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். மிட்-ரேஞ்ச் விலையில் பக்கவான டிஸ்பிளே, கேமரா மற்றும் பர்பாமென்ஸ் கொண்ட போன் வாங்க வேண்டும் என்றால், இந்த ரெட்மி நோட் 12 ப்ரோ போன் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








