Redmi Sale: ஏற்கனவே பட்ஜெட் விலை.. இதுல ஆஃபர் வேறயா.. 2 புதிய ரெட்மி போன்களின் விற்பனை ஆரம்பம்!
சமீபத்தில் ரெட்மி நோட் 12 (Redmi Note 12) மற்றும் ரெட்மி 12சி (Redmi 12C) என்கிற 2 பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின. தற்போது அந்த 2 போன்களுமே பிளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம்ஸ் வழியாக விற்பனைக்கு வந்துள்ளன.
ரெட்மி 12சி அசல் விலை & ஆஃபர் விலை: இது இந்த 2023 ஆம் ஆண்டில் ரெட்மி பிராண்டிங்கின் கீழ் அறிமுகமான மிகவும் மலிவான ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆன 4ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ.8,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் ஐசிஐசிஐ டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை (ICICI Debit and Credit Card) பயன்படுத்தி ரெட்மி 12சி ஸ்மார்ட்போனை வாங்கினால் உங்களுக்கு ரூ.500 தள்ளுபடி கிடைக்கும். இதன் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ.8,499 ஆக குறைக்க முடியும்.
ரெட்மி 12சி ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் வெளியாகியுள்ளது. அது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது; ஐசிஐசிஐ கார்டை பயன்படுத்தினால் ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக இந்த போன் ப்ளூ, பிளாக், பர்பிள் மற்றும் க்ரீன் கலர்களில் வாங்க கிடைக்கிறது.
ரெட்மி நோட் 12 4ஜி அசல் விலை & ஆஃபர் விலை: இது வெறும் பட்ஜெட் போன் மட்டுமல்ல; குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 ப்ராசஸருடன் இந்தியாவிற்கு வரும் முதல் ஸ்மார்ட்போனும் கூட. இது 6ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது.
பேஸிக் வேரியண்ட் ரூ.14,999 க்கும், ஹை-எண்ட் வேரியண்ட் ரூ.16,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் இரண்டின் மீது ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும். இதன் மூலம் ரெட்மி நோட் 12 போனின் விலையை ரூ.13,999 ஆக மற்றும் ரூ.14,999 ஆக குறைக்க முடியும்.
ரெட்மி நோட் 12 முக்கிய அம்சங்கள்: சன்ரைஸ் கொலைட், லூனார் பிளாக் மற்றும் ஃப்ரோஸ்டட் ஐஸ் ப்ளூ என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே உள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனாக வரும் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவாகும்.
மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 ப்ராசஸர், 50எம்பி + 8எம்பி அல்ட்ரா-வைட் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட MIUI 14 ஓஎஸ், 33W பாஸ்ட் சார்ஜிங்கை வழங்கும் 5000mAh பேட்டரி போன்றவைகளையும் கொண்டுள்ளது.
ரெட்மி 12சி முக்கிய அம்சங்கள்: இது 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.71 இன்ச் எச்டி+ டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி85 ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட MIUI 13 ஓஎஸ், 10W சார்ஜிங் உடனான 5000mAh பேட்டரி, 50எம்பி இயர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








