நிமிடத்துக்கு நிமிடம் ஆர்டர் பிச்சிக்குது.. 8GB ரேம்.. 5000mAh பேட்டரி.. விஸ்வரூப வரவேற்பில் ரெட்மி போன்..
ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் தரமான 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மாார்ட்போனுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றே கூறலாம். இந்நிலையில் ரெட்மி நிறுவனம் தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இதுவரை 1 மில்லியன் யூனிட்கள், அதாவது 10 லட்சம் யூனிட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது என ரெட்மி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி நோட் 12 5ஜி ஆனது வேகமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் என்ற சாதனை படைத்துள்ளது.

அதேபோல் அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி 12 5ஜி போன் ஆனது ரூ.15,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த போனின் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் ரூ17,499 விலையிலும், 8ஜிபி ரேம் கொண்ட வேரிண்யண்ட் ரூ.19,499 விலையிலும் வாங்க முடியும்.
இப்போது ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மர்ரட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான போன் வெளிவந்துள்ளது.
48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக பட்ஜெட் விலையில் தரமான சிப்செட், 5ஜி ஆதரவு, அருமையான கேமரா, நீண்ட நேரம் பேக்கப் தரும் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. எனவே மக்கள் இந்த போனை போட்டிப்போட்டுக் கொண்டு வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.


Click it and Unblock the Notifications








