கேப் விடாமல் தூள் கிளப்பும் Redmi: மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் புதிய 5ஜி மாடல்.!
ரெட்மி நிறுவனம் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் ரெட்மி நிறுவனம் ஏற்கனவே 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் உடன் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்நிலையில் 8ஜிபி ரேம் கொண்ட புதிய ரெட்மி நோட் 12 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த ரெட்மி மாடலை ரூ.21,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த புதிய வேரியண்ட் வரும் ஏப்ரல் 6-ம் தேதி அமேசான், எம்ஐ.காம் தளங்களில் விற்பனைக்கு வருகிறது.

குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு
மிகவும் அருமையாக உள்ளது.
4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மர்ரட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கம். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் மற்றும் பல சென்சார் வசதிகளுடன் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த போனின் எடை 188 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications