Home
Mobile

அல்வாவை போல அள்ளுறாங்க.. திடீர்னு ரூ.3000 விலை குறைப்பு.. அதுவும் இந்த Redmi Note போன் மீது.. யாரு விடுவா!

இந்தியாவில் அறிமுகமான நாளிலிருந்து விற்பனையில் சக்கைபோடு போடும் ஒரு ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் மீது முழுதாக ரூ.3000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அதன் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ரெட்மி நிறுவனமானது அதன் புதிய நோட் 13 5ஜி சீரிஸ் (Redmi Note 13 5G Series) ஸ்மார்ட்போன்களை ஜன.4 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், கடந்தாண்டு அறிமுகமான ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) ஸ்மார்ட்போன் மீது ரூ.3000 வரையிலான விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

திடீர்னு ரூ.3000 விலை குறைப்பு.. அதுவும் இந்த Redmi Note போன் மீது!

பழைய விலை என்ன? நினைவூட்டும் வண்ணம் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன், ஆரம்பத்தில் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகமானது: பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.17,999 க்கும், ஹை-எண்ட் 6ஜிபி ரேம் +128ஜிபி ஆப்ஷன் ரூ.19,999 க்கும் அறிமுகமானது. பின்னர் டாப்-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனாக 8ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் ரூ.21,999 க்கு அறிமுகமானது.

புதிய விலை என்ன? ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன்கள் மீது முறையே ரூ.3000 விலைக்குறைப்பும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் மீது ரூ.2500 விலைக்குறைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.18,999 க்கும், 6ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.16,999 க்கும், 4ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.15,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

திடீர்னு ரூ.3000 விலை குறைப்பு.. அதுவும் இந்த Redmi Note போன் மீது!

ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் வரையிலான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் (Adaptive Refresh Rate), 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் ( Corning Gorilla Glass 3 Protection) உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (1080 x 2400 பிக்சல்ஸ்) அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

டூயல் 5ஜி சிம் ஆதரவு (Dual 5G SIM Support) உடன் வரும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6 என்எம் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் (6nm octa-core Qualcomm Snapdragon 4 Gen 1 chipset) மூலம் இயக்கப்படுகிறது.

திடீர்னு ரூ.3000 விலை குறைப்பு.. அதுவும் இந்த Redmi Note போன் மீது!

ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 8ஜிபி வரையிலான வழக்கமான ரேம் + 5ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) என மொத்தம் 11ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி கார்டு (MicroSD Card) வழியாக 1டிபி வரையிலான ஸ்டோரேஜை வழங்குகிறது

ஆண்ட்ராய்டு 12 (Android 12) அடிப்படையிலான எம்ஐயுஐ 13 (MIUI 13) உடன் இயங்கும் ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.88 லென்ஸ் உடனான 48 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.2 லென்ஸ் உடனான 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா + எப் /2.4 லென்ஸ் உடனான 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது.

முன்பக்கத்தில் எப்/2.45 லென்ஸ் உடனான 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. மேலும் இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் இது ஐபி53 ரேட்டிங்கையும் (IP53 Rating) கொண்டுள்ளது. இந்த ரேட்டிங் நீர் மற்றும் தூசி-எதிர்ப்பு வடிவமைப்பை (Water and Dust-resistant Design) வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 12 5G gets Rs 2500 Price cut in India Ahead Redmi Note 13 series Launch on Jan 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X