யாருயா சொன்னா நல்ல போன கம்மி விலைல வாங்க முடியாதுனு.! Redmi Note 12 5G பாருங்க.!

|

Redmi Note 12 5G: கம்மியான விலையில் பெஸ்டான ஸ்மார்ட்போன் டிவைஸை வாங்க வேண்டும் என்பது தான் அனைவருடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. மக்கள் முன்பு கம்மி விலையில் குறைந்த விலையில் ஏதேனும் ஒரு 4ஜி டிவைஸ்களை தேர்வு செய்ய முயன்றார்கள். ஆனால், இப்போது மக்கள் கம்மி விலையில் எப்படி சிறந்த 5ஜி டிவைஸை வாங்கலாம் என்றே இணையத்தை எக்ஸ்ப்ளோர் செய்கிறார்கள்.

Redmi Note 12 5G தொடரை அறிமுகப்படுத்த ரெடி.!

Redmi Note 12 5G தொடரை அறிமுகப்படுத்த ரெடி.!

பட்ஜெட் செக்மென்ட்டில் (Budget Segment) 5ஜி போன்களை (5G phone) தேடி அலைந்த மக்களுக்காக சியோமி நிறுவனம் இப்போது ஒன்றல்ல, மொத்தம் மூன்று புது ஸ்மார்ட்போன் (smartphone) டிவைஸ்களை அறிமுகம் செய்கிறது.

உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான Xiaomi அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய சந்தையில் Redmi Note 12 5G தொடரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்தத் தொடரில் மூன்று ஸ்மார்ட்போன்கள் உள்ளன.

Redmi Note 12 Pro 5G மற்றும் Redmi Note 12 Pro+ 5G ஸ்மார்ட்போன்கள்

Redmi Note 12 Pro 5G மற்றும் Redmi Note 12 Pro+ 5G ஸ்மார்ட்போன்கள்

இதில் Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G மற்றும் Redmi Note 12 Pro+ 5G ஆகிய மாடல்கள் அடங்கும். இந்த சீரிஸ் இன் அடிப்படை வேரியண்ட் மாடல் Amazon மூலமாக விற்பனை கொண்டுவரப்படும் என்று சியோமி அறிவித்துள்ளது.

அதேபோல், இந்த சீரிஸ் இன் Pro மற்றும் Pro+ மாடல்கள் Flipkart வழியாக வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விற்பனை அடுத்த ஆண்டின் (2023) ஜனவரியில் துவக்கத்தில் துவங்கும்.

iPhone-ல மட்டும் தான் Sony சென்சார் வருமா? நாங்க என்ன சும்மாவா? Redmi K60-ல் சியோமி டிவிஸ்ட்.!iPhone-ல மட்டும் தான் Sony சென்சார் வருமா? நாங்க என்ன சும்மாவா? Redmi K60-ல் சியோமி டிவிஸ்ட்.!

Redmi Note 12 5G சிப்செட் மற்றும் மற்ற விபரங்கள்

Redmi Note 12 5G சிப்செட் மற்றும் மற்ற விபரங்கள்

இந்த ஸ்மார்ட்போன் சாதனங்கள் Qualcomm Snapdragon 4 Gen 1 சிப்செட் உடன் வெளிவரும்.

இது 48MP ப்ரைமரி கேமரா மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வரவிருக்கும் Redmi Note 12 5G பற்றிய சில முக்கிய விவரக்குறிப்புகளை Amazon இன் பக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனவரி 5 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் தொடரை வெளியிடத் தயாராக இருப்பதாக Xiaomi உறுதிப்படுத்தியுள்ளது.

Redmi Note 12 5G டிஸ்பிளே விபரம்

Redmi Note 12 5G டிஸ்பிளே விபரம்

அமேசான் பக்கத்தின்படி, Redmi Note 12 5G செல்ஃபிக்களுக்கான மையப்படுத்தப்பட்ட பஞ்ச்-ஹோல் நாட்ச் கொண்ட AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.

இந்த டிஸ்பிளேவின் தெளிவுத்திறன் மற்றும் ரெப்ரெஷ் ரேட் விகிதம் இன்னும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi Note தொடரின் அடிப்படையில், வரவிருக்கும் ஸ்மார்ட்போன் முழு HD+ தெளிவுத்திறனுடன் கூடிய உயர் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என்று கூறலாம்.

இந்த போனை பார்த்து உலகமே ஆடிப்போய்டுச்சு.! அண்டர் டிஸ்பிளே கேமராவுடன் Red Magic 8 Pro.!இந்த போனை பார்த்து உலகமே ஆடிப்போய்டுச்சு.! அண்டர் டிஸ்பிளே கேமராவுடன் Red Magic 8 Pro.!

Redmi Note 12 5G கேமரா விபரம்

Redmi Note 12 5G கேமரா விபரம்

கேமராக்களைப் பொறுத்தவரை, வரவிருக்கும் Redmi Note 12 5G டிவைஸ் 48MP பிரைமரி கேமராவுடன் வெளிவரும்.

இதனுடன் 2MP டெப்த் சென்சார் மற்றும் 8MP முன்பக்க கேமராவைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் Redmi Note 12 5G இந்திய மாடலில் Qualcomm Snapdragon 4 Gen 1 சிப்செட் உடன் சேர்க்கப்படும் என்று ஸ்மார்ட்போன் பிராண்ட் அறிவித்துள்ளது.

Qualcomm Snapdragon 4 Gen 1 ஆனது 2.0 GHz என மதிப்பிடப்பட்ட இரண்டு கார்டெக்ஸ் A78 கோர்களைக் கொண்டுள்ளது.

5,000mAh பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங்

5,000mAh பேட்டரி உடன் பாஸ்ட் சார்ஜிங்

இது 6nm CPU அடிப்படையிலானது. பேட்டரியைப் பொறுத்தவரை, ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி இருக்கும் என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இந்த புதிய Redmi Note 12 ஸ்மார்ட்போன் ப்ளூ, வைட் மற்றும் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் வரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் என்ன ஸ்டோரேஜ் விருப்பங்களில் வரும் என்பதும் தெரியவந்துள்ளது.

உங்கள் அறைக்கு சரியான டிவி சைஸ் எது? இந்த ஃபார்முலா தெரியாம டிவி வாங்கவே கூடாது.!உங்கள் அறைக்கு சரியான டிவி சைஸ் எது? இந்த ஃபார்முலா தெரியாம டிவி வாங்கவே கூடாது.!

ரெட்மி நோட் 12 என்னென்ன வேரியண்ட் மாடல்களில் வருகிறது?

ரெட்மி நோட் 12 என்னென்ன வேரியண்ட் மாடல்களில் வருகிறது?

இதன்படி, இறுதியாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 4ஜிபி ரேம் + 128ஜிபி, 6ஜிபி ரேம் + 128ஜிபி, 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆகிய நான்கு ஸ்டோரேஜ் வகைகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi அக்டோபர் மாதம் சீனாவில் Redmi Note 12 தொடரை நான்கு வெவ்வேறு ஸ்மார்ட்போன்களுடன் ஒரு ஸ்பெஷல் எடிஷன் மாடலுடன் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் விலை பட்ஜெட் செக்மென்ட்டில் அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 12 5G Comes Sale Via Amazon Pro and Pro+ Comes To Sale Via Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X