6.67-இன்ச் டிஸ்பிளே.. 128ஜிபி மெமரி.. ரெட்மி 5ஜி போனுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.. எந்த மாடல்?
அக்டோபர் 8-ம் தேதி பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே சேல் (Flipkart's Big Billions Day Sale) மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் (Amazon Great Indian Festival Sale)ஆகியவை தொடங்குகிறது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் லேப்டாப், ஸ்மார்ட்போன், டேப்லெட், ஸ்மார்ட் டிவி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை மிகவும் கம்மி விலையில் வாங்க முடியும்.
அதேபோல் தற்போது அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் + 128ஜிபி கொண்ட ரெட்மி நோட் 12 5ஜி வேரியண்ட் ரூ.15,999 விலையில் வாங்க முடியும். ஆனால் அமேசான் பகிர்ந்துள்ள விளம்பரப் படத்தின்படி, இதே வேரியண்டை ரூ.13,999 விலையில் வாங்க முடியும். மேலும் இதே ரெட்மி நோட் 12 5ஜி போனை பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகளுடன் சேர்த்து ரூ.10,799 விலையில் வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்போம். 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். பின்பு 1080×2400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ரெட்மி நோட் 12 5ஜி (Redmi Note 12 5G) ஸ்மார்ட்போன் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 (Snapdragon 4 Gen 1) சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும் மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
4ஜிபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மர்ரட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான போன் வெளிவந்துள்ளது.

48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸமார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போன்.
குறிப்பாக இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல்வேறு அசத்தலான ஸ்மார்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு போனுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








