மீண்டும் ஒரு சூப்பரான ஸ்மார்ட்போனை கம்மி விலையில் களமிறக்கும் Redmi.!
ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் கம்மி விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் ஏற்கனவே ரெட்மி நோட் 12 5ஜி சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 12 4ஜி போன்
அதாவது ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி உள்ளிட்ட போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்து சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளன. ஆனால் ரெட்மி நோட் 12 4ஜி போன் ஆனது கம்மி விலையில் அறிமுகமாகும்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதி
இணையத்தில் கசிந்த தகவலின்படி ரெட்மி நோட் 12 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் அறிமுகமாகும். பின்பு 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன். தற்போது இந்த புதிய போனின் இயங்குதளம் மற்றும் ஸ்டோரேஜ் பற்றி விவரங்கள் மட்டும் தெரியவந்துள்ளது. விரைவில் இந்த ரெட்மி நோட் 12 4ஜி முழு விவரங்களையும் ரெட்மி நிறுவனம் வெளியிடும்.

ரெட்மி நோட் 12 5ஜி
மேலும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1,080×2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த 5ஜி ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதி
ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 5ஜி போன். ஆனால் விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

48எம்பி பிரைமரி கேமரா
ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும்.

5000 எம்ஏஎச் பேட்டரி
5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்.

ஆரம்ப விலை..
5ஜி, வைஃபை, ப்ளூடூத் வி5.1, 3.5எம்எம் ஹெட்ஃபோன் ஜாக், ஜிபிஎஸ், மோனோ ஸ்பீக்கர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். பின்பு இந்த போனின் ஆரம்ப விலை ரூ.16,499-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








