நாளை அறிமுகமாகும் ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன்.! என்னென்ன அம்சங்கள்.!
ரெட்மி நிறுவனம் நாளை (மே 24) ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதேபோல் இந்த புதிய சாதனம் விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11டி ப்ரோ
ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும்.
ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.
ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இந்த சாதனம் 64எம்பி ரியர் கேமரா, டால்பி விஷன் ஆதரவு மற்றும் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவரும். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போனில் 5080 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய ரெட்மி நோட் 11டி ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல்
இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.
ரெட்மி 10 பிரைம் 2022

ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு,90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.
ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் மாலி ஜி52 ஜிபியு ஆதரவு மற்றும் HyperEngine 2.0 வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதேபோல் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 9 வாட் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங், கைரேகை சென்சார் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன். டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஜாக், ஐஆர் பிளாஸ்டர், ஹைப்ரிட் மைக்ரோ எஸ்டி ஸ்லாட் மற்றும் ஸ்பிளாஸ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்-ஐபி53 போன்ற பல சிறப்பு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் 2022 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் எடை 192 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications