புது மில்க் சால்ட் ஒயிட் நிறத்தில் Redmi Note 11T Pro, Note 11T Pro+ அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

|

ரெட்மி ஸ்மார்ட்போன் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ், Redmi Note 11T Pro மற்றும் Redmi Note 11T Pro+ ஸ்மார்ட்போன் மாடல்கள் இப்போது 'மில்க் சால்ட் ஒயிட்' என்ற வண்ண மாடலாக சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் Weibo வழியாக இந்த தகவலை அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் முதலில் அட்டாமிக் சில்வர், மிட்நைட் டார்க்னஸ் மற்றும் டைம் ப்ளூ வண்ண விருப்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

புது நிறத்தில் ரெட்மி நோட் 11டி ப்ரோ மற்றும் நோட் 11டி ப்ரோ+

புது நிறத்தில் ரெட்மி நோட் 11டி ப்ரோ மற்றும் நோட் 11டி ப்ரோ+

இப்போது, இது ஒரு புதிய வண்ண மாறுபாட்டை பெற்றுள்ளது. இந்த புதிய மாடலில் விவரக்குறிப்புகளின் அடிப்படையில் புதிதாக எந்த வேறுபாடுகளும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. ரெட்மி நோட் 11டி ப்ரோ மற்றும் நோட் 11டி ப்ரோ+ ஆகிய 2 ஸ்மார்ட்போன் மாடல்கள் இரண்டும் ஏறக்குறைய ஒரே சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. Redmi Note 11T Pro தொடர் 144Hz அம்சத்துடன் கூடிய 6.6' இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

Redmi Note 11T Pro, Note 11T Pro+ மில்க் சால்ட் ஒயிட் விலை என்ன?

Redmi Note 11T Pro, Note 11T Pro+ மில்க் சால்ட் ஒயிட் விலை என்ன?

சீனாவில் Redmi Note 11T Pro 'மில்க் சால்ட் ஒயிட்' நிற மாடலின் விலை CNY 1,599 ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 18,900 விலையில் தொடங்குகிறது. Redmi Note 11T Pro தொடரின் புதிய மாடல் இன்னும் Xiaomi இன் ஆன்லைன் ஸ்டோரில் பட்டியலிடப்படவில்லை. புதிய வண்ண விருப்பத்தில் Redmi Note 11T Pro மற்றும் Note 11T Pro+ இன் மற்ற ஸ்டோரேஜ் வகைகளுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் நம்மிடம் சில தகவல் இருக்கிறது.

Redmi Note 11T Pro+ ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Redmi Note 11T Pro+ ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Redmi Note 11T Pro+ ஆனது தற்போது 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் அடிப்படை மாறுபாட்டின் விலை CNY 1,999 ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 23,600 விலையில் கிடைக்கும். மிட் ரேஞ் மாடலின் 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை CNY 2,199 ஆக இருக்கிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 26,000 ஆகும். இதன் டாப்-எண்ட் 512ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை CNY 2,399 ஆகி இருக்கிறது. இது இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 28,300 விலையில் கிடைக்கிறது.

SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!

Redmi Note 11T Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Redmi Note 11T Pro ஸ்மார்ட்போனின் விலை என்ன?

Redmi Note 11T Pro ஸ்மார்ட்போனின் பேஸ் வேரியண்ட் மாடலின் விலை CNY 1,599 ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 18,900 விலையில் கிடைக்கிறது. இதன் மிட் ரேஞ் மாடலின் CNY 1,899 விலையில் வருகிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 22,400 விலையில் கிடைக்கிறது. டாப்-எண்ட் வேரியண்ட் மாடலின் விலை CNY 2,099 ஆக இருக்கிறது. இது இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 24,800 விலையில் வருகிறது.

Redmi Note 11T Pro+ மில்க் சால்ட் ஒயிட் சிறப்பம்சம்

Redmi Note 11T Pro+ மில்க் சால்ட் ஒயிட் சிறப்பம்சம்

Redmi Note 11T Pro+ 'மில்க் சால்ட் ஒயிட்' வண்ண வேரியண்ட் 2,460 x 1,080 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 6.6' இன்ச் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 144Hz அம்சத்துடன் கூடிய 270Hz டச் சாம்ப்ளிங் வீதத்துடன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி ரேம் உடன் கூடிய வெபர் கூலிங் VC ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்ற முடியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!அட்ரஸ் ப்ரூப் இல்லாமல் ஆதார் முகவரியை மாற்ற முடியுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரி

120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரி

Redmi Note 11T Pro+ ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் Samsung ISOCELL GW1 பிரைமரி சென்சார் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5G, 4G LTE, Wi-Fi 6, புளூடூத் v5.3, GPS/A-GPS, NFC, USB Type-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவற்றைப் பெறுகிறது. இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,400mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த பிரைட் வைட் மாடலை வாங்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Redmi Note 11T Pro and Note 11T Pro+ Milk Salt White Variant Launched Know The Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X