33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் ரெட்மி நோட் 11டி ஸ்மார்ட்போன்.!
ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் நவம்பர் 30-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளிவந்த தகவலின்படி ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் 33 வாட் ப்ரோ பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 33 வாட் ப்ரோ பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் விரைவில் சார்ஜ் செய்ய முடியும். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 2,400x1,080 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி/128ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimesity 810 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். அதாவது இந்த சிப்செட் மிக வேகமாக செயல்படும் என்றே கூறலாம். கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக செயல்படும் என்றே கூறலாம். குறிப்பாக பல ஆப் வசதிகளை இயக்குவதற்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும்.
ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். மேலும் 33 வாட் ப்ரோ பாஸ்ட சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் மற்றும் பல சென்சார் ஆதரவுகள் உள்ளன.
குறிப்பாக கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் இந்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் புளூடூத் வி5.1, 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக ரெட்மி நிறுவனம் இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. அதாவது விரைவில் 5ஜி சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் தொடர்ந்து பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications