Home
Mobile

வந்துருச்சு.,அறிமுகமான ரெட்மி நோட் 11டி 5ஜி- 8ஜிபி ரேம், 50எம்பி கேமரா என எல்லாமே வேறலெவல்-விலை இன்னும் குறைவு

ரெட்மி நோட் 11டி 5ஜி இரட்டை பின்புற கேமராக்கள், மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி உடன் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.16,999 ஆக இருக்கிறது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த செவ்வாய்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ரெட்மி போனானது சியோமி சீனாவில் அறிமுகம் செய்த் ரெட்மி நோட் 11 5ஜி சாதனத்தின் மறுபெயரிட்ட பதிப்பாகும். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது. துளை பஞ்ச் காட்சி வடிவமைப்புடன் இது வருகிறது. இது வேகமான சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. அதேபோல் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 10டி 5ஜி சாதனத்தின் அடுத்தப்படியாக ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் வருகிறது. இது ரியல்மி 8எஸ் 5ஜி, ஐக்யூ இசட் 3 போன்ற சாதனங்களுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் விலை

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் விலை

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த வேரியண்ட் விலை ரூ.16,999 ஆக இருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,999 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.19,999 ஆகவும் இருக்கிறது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது அக்வா மெரைன் ப்ளூ, மேட் பிளாக் மற்றும் ஸ்டார்டஸ்ட் வைட் வண்ண விருப்பத்தில் வருகிறது.

ரூ.1000 உடனடி தள்ளுபடி

ரூ.1000 உடனடி தள்ளுபடி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி அமேசான், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் உள்ளிட்ட சில்லறை விற்பனை தளங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் வாங்கும் போது ரூ.1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.13,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,999 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

ரெட்மி நோட் 11 5ஜி ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.14,100 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.15,300 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.17,700 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.20,000 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 11டி 5ஜி சிறப்பம்சங்கள்

ரெட்மி நோட் 11டி 5ஜி சிறப்பம்சங்கள்

ரெட்மி நோட் 11டி 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது இரட்டை நானோ சிம் மற்றும் ஆண்ட்ராய்டு 11 மூலம் எம்ஐயூஐ 12.5 உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் அம்சத்தோடு வருகிறது. மேலும் டிஸ்ப்ளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு அம்சமும் இருக்கிறது. இது மாலி ஜி57 எம்சி2 ஜிபியு மற்றும் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. சியோமி ரேம் பூஸ்டர் அம்சத்தை கொண்டுள்ளது. இது மல்டி டாஸ்கிங் ஆதரவுக்கு என 3 ஜிபி ரேம் வரை கூடுதலாக இணைக்க மொபைலில் உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்தை பயன்படுத்தப்படுகிறது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது அல்ட்ரா வைட் ஷூட்டர் உடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உட்பட இரட்டை பின்புற கேமராக்களை கொண்டிருக்கிறது.

செல்பி மற்றும் வீடியோ வசதி

செல்பி மற்றும் வீடியோ வசதி

செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய ஸ்லாட் வசதி இருக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில் இது 5ஜி ஆதரவு, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வெர்சன் 5.1, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்சி போர்ட் உள்ளிட்டவை அடங்கும் என கூறப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

33 வாட்ஸ் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

33 வாட்ஸ் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

பேட்டரி அம்சத்துக்கு என ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் வரை ஆயுட்காலத்தை வழங்குகிறது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது ஐபி53 மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் எதிர்ப்பு திறன் ஆதரவோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 11T 5G Smartphone Launched in India With 8GB RAM, 50 MP Camera and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X