அடுத்த கலக்கல் சாதனம்- மூன்று வேரியண்ட், 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி நோட் 11டி 5ஜி: நவம்பர் 30 உறுதி!
ரெட்மி நோட் 11டி 5ஜி நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை குறித்து கசிவுத் தகவல்களை பார்க்கலாம். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இது மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அமேசான் தளத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11டி 5ஜி
ரெட்மி நோட் 11டி 5ஜி இந்தியாவில் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகம்
ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் இந்திய விலைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் சார்ஜிங் திறன்களை ரெட்மி உறுதிப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது என ரெட்மி இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனானது கடந்த மாதம் சீனாவில் அறிமுகமான ரெட்மி நோட் 11 5ஜி ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

ரெட்மி இந்தியா டுவிட்
ரெட்மி இந்தியா டுவிட் குறித்த தகவல்களை பார்க்கலாம். ரெட்மி நோட் 11டி 5ஜி 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் உடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் 6என்எம் சிப்செட் உடன் வரும் முதல் ரெட்மி ஸ்மார்ட்போன் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 11டி விலை
ரெட்மி நோட் 11டி ஸ்மார்ட்போனின் கிடைக்கும் தன்மை மற்றும் அறிக்கைகள் குறித்து பார்க்கலாம், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6 ஜிபி ரேம் மற்றஉம் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.16,999 என்ற விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு அமேசான் தளம் மற்றும் எம்ஐ.காம்-ல் கிடைக்கும்

240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதம்
ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தைக் கொண்டுள்ளது. இது 6.6 இன்ச் முழு எச்டி எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 810 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் எனவும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வரும் என கூறப்படுகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட்போன் மெமரி நீட்டிப்பு ஆதரவோடு வரும் எனவும் இதன்மூலம் 1டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம் எனவும் கூறப்படுகிறது.

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு
ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்வாமெரைன் ப்ளூ, மேட் பிளாக் மற்றும் ஸ்டார்லைட் ஒயிட் வண்ண விருப்பத்தில் வரும் என கூறப்படுகிறது.
File Images


Click it and Unblock the Notifications