Home
Mobile

பிப்ரவரி 9: இந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன்.!

ரெட்மி நிறுவனம் வரும் பிப்ரவரி 9-ம் தேதி ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் கசிந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11எஸ்

ரெட்மி நோட் 11எஸ்

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080பிக்சல் தீர்மானம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் எனப் பல்வேறு சிறப்பான
அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரெட்மி நோட் 11எஸ்

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் Samsung HM2 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 13எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில்

புதிய ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மிக வேகமாக செயல்படும். அதேபோல் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே
இந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையக இருக்கும்.

ட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போ

இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 50

இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11எஸ்
மாடல். ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே
அறிமுகம் செய்த ரெட்மி நோட் 11டி 5ஜி ஸமார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும்

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த
ஸ்மார்ட்போன் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும்புகைப்படங்களை எடுக்க முடியும். 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு
ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Redmi Note 11S with 108 Mega Pixel Camera Launching in India on February 9: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X