இந்தியா: விரைவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன்.!
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் சமீபத்தில் ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 108எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் தனித்துவமான சிப்செட் எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்தரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில்கசிந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் எனப் பல்வேறு சிறப்பான
அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 108எம்பி Samsung HM2 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் 13எம்பி கேமரா ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
புதிய ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மிக வேகமாக செயல்படும். அதேபோல் கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கும் இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையக இருக்கும்.

இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டைபயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

இந்த ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.
மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11எஸ்மாடல்.

ரெட்மி நோட் 11எஸ் ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்இ என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications