குறைந்த விலையில் பெஸ்டான 5G போனா இந்த Redmi Note 11R? வெயிட் செஞ்சு வாங்கலாமா?

|

Redmi நிறுவனம் தங்களது நோட் 11 சீரிஸ்ஸின் அடுத்த வரவாக ரெட்மி நோட் 11R (Redmi Note 11R) என்ற புதிய ஸ்மார்ட் போனை சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ரெட்மீ நோட் 11R ஸ்மார்ட்போன் Dimensity 700 சிப்செட் உடன், இரண்டு பின்பக்க கேமெராக்கள் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை பேக் செய்து, ஒரு சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட் போன் மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன், இந்திய வருகை மற்றும் விலை விபரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Redmi Note 11R ஸ்மார்ட்போன் விலை என்ன?

Redmi Note 11R ஸ்மார்ட்போன் விலை என்ன?

Redmi Note 11R ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் மாடல் சீனாவில் CNY 1,099 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 12,600 ஆகும். இதன், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடல் CNY 1,199 என்ற விலையில் வருகிறது. இந்திய மதிப்பில் இது ரூ. 13,700 ஆகும். இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் இந்திய மதிப்பில் ரூ. 16,000 விலைக்கு Redmi பிரத்தியேக இணையதளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரெட்மி நோட் 11R எப்போது இந்தியா வருகிறது?

ரெட்மி நோட் 11R எப்போது இந்தியா வருகிறது?

மேலும் இந்த ரெட்மி நோட் 11R ஸ்மார்ட் போன் போலார் ப்ளூ ஓசன் (Polar Blue Ocean), மிஸ்டேரியஸ் டார்க்னெஸ் (Mysterious Darkness) மற்றும் ஐஸ் கிரிஸ்டல் கேலக்சி (Ice Crystal Galaxy) ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இது மிக விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.81000 டெபாசிட்! உடனே Online இல் பேலன்ஸ் செக் செய்யுங்க.!

Redmi Note 11R சிறப்பம்சம்

Redmi Note 11R சிறப்பம்சம்

இந்த ரெட்மீ நோட் 11R ஸ்மார்ட் போன் 6.58' FHD+ கொண்ட 1080 x 2408 பிக்சல் உடைய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 90HZ ரெப்பிரேஷ் ரேட் கொண்ட 1500:1 கான்ட்ராஸ்ட் ரேசியோ உடன் கூடிய 240Hz டச் சாம்ப்ளிங் ரேட்டுடன் வருகிறது. மேலும் இந்த ரெட்மீ நோட் 11R ஆக்டா கோர் 7nm MediaTek Dimensity 700 SoC சிப்செட்டில் வேலை செய்கிறது.1TB வரை விரிவுபடுத்த கூடிய 128 GB UFS 2.2 ஸ்டோரேஜ் மற்றும் அதிகபட்சம் 8GB LPDDR4x RAM உடன் வருகிறது.

Redmi நோட் 11R பேட்டரி மற்றும் கேமரா

Redmi நோட் 11R பேட்டரி மற்றும் கேமரா

இந்த ரெட்மி நோட் 11R 5000 mAh பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது. இந்த போன் 10W சார்ஜருடன் வருகிறது. கேமரா அம்சத்தைப் பற்றிப் பேசுகையில், இது f/2.8 லென்ஸுடன் கூடிய 13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா மற்றும் f/2.4 லென்ஸுடன் கூடிய 2 மெகா பிக்சல் போர்ட்ரைட் ஷூட்டர் என்று டூயல் ரியர் கேமராக்களை கொண்டுள்ளது. இத்துடன் செல்ஃபீ எடுப்பதற்காக முன்பக்க டிஸ்பிளேவில் 5 மெகா பிக்சல் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.

WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!WhatsApp வாய்ஸ் மற்றும் வீடியோ கால்ஸை Record செய்வது எப்படி? ரொம்ப ஈஸியான டிப்ஸ்.!

Redmi Note 11R இதர அம்சங்கள்

Redmi Note 11R இதர அம்சங்கள்

இந்த சாதனம் 5G, வைஃபை, Bluetooth v5.1, GPS/ A-GPS, GLONASS, Infrared IR remote control போன்ற வயர்லெஸ் அம்சங்களுடன் 3.5mm ஹெட் போன் ஜாக் மற்றும் சி-டைப் USB போர்ட் ஆகிய அம்சங்களும் இந்த ரெட்மீ நோட் 11R வருகிறது. இதில் சைடு மௌண்டட் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ஃபேஸ் அன்லாக்வசதியும் உள்ளது. இத்தனை அம்சங்கள் கொண்ட இந்த ரெட்மீ நோட் 11R ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 12 MIUI 13ல் இயங்குகிறது. இது குறைந்த விலையில் கிடைக்கும் பெஸ்டான 5ஜி போனாக மாறப்போகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Redmi Note 11R 5G Has Been Launched Under Budget Segment By The Xiaomi Sub-Brand

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X