ரெட்மி நோட் 11இ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்?
ரெட்மி நிறுவனம் புதிய ரெடமி நோட் 11இ ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் சிப்செட், பாஸ்ட் சார்ஜிங் வசதி, தரமான டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி நோட் 11இ ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Samsung AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080×2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 11இ ப்ரோஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

புதிய ரெட்மி நோட் 11, ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரெட்மி நோட் 11இ ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 67 வாட் பாஸ்ட்சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

5ஜி, 4ஜி எல்டிஇ,வைஃபை 802.11, புளூடூத் வி5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். மேலும் கருப்பு, நீலம், வெள்ளை நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11இ ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலைCNY 1,6999 (இந்திய மதிப்பில் ரூ.20,300) ஆக உள்ளது. விரைவில் இந்த புதியஸ்மார்ட்போன் மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications