ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனுக்கு சத்தமில்லாமல் விலை உயர்வு: முழு விவரம்.!
ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனுக்கு சத்தமில்லாமல் ரூ.500 விலை உயர்த்தியுள்ளது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 மாடலின் முந்தைய விலை ரூ.13,499-ஆக இருந்தது, ஆனால் தற்போது ரூ.500 விலை உயர்த்தப்பட்டு ரூ.13,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் மற்ற இரண்டு வேரியண்ட்களும் அதே விலையில் தான் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டரெட்மி நோட் 11 மாடலை ரூ.14,999-விலையிலும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 மாடலை ரூ.15,999-விலையிலும் வாங்க முடியும்.

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1080x2400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இவற்றுள் அடக்கம். இதுதவிர
பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபிஃ 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு33 வாட் பாஸ்ட் சார்ஜிங், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்இடி, டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 195 கிராம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications