Home
Mobile

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 11 சீரிஸ்.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் புதிய ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி நோட் 11 மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 11 சீரிஸ்.!

மூன்று பிரைமரி கேமராக்கள், பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், வளைந்த திரை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்கள். குறிப்பாக இந்திய சந்தையில் அதிக
எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரெட்மி நோட் 11 சீரிஸ்.

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 11 சீரிஸ்.!

குறிப்பாக ரெட்மி 11 ப்ரோ மாடலில் 67 வாட் சார்ஜர் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி, 4500 எம்ஏஎச் பேட்டரி, யுஎஸ்பி டைப் சி போர்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஐ.ஆர். சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்கள். குறிப்பாக இந்த சாதனங்கள் அக்டோபர் 28 ஆம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அமேசான் தளத்தில் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி சற்று விரிவாகாப் பார்ப்போம்.

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 11 சீரிஸ்.!

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.17,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,400x1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10 ப்ரோஸ்மார்ட்போன்.

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 11 சீரிஸ்.!

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சிப்செட் மிக வேகமாக செயல்படும் என்றுதான் கூறவேண்டும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி டெலிமேக்ரோ கேமரா + 5எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 11 சீரிஸ்.!

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன். 4ஜி வோல்டிஇ, வைஃபை 6 802.11 ஏஎக்ஸ, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி 3.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10 ப்ரோ. அதேபோல் இந்த ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும். மேலும் ரெட்மி நோட் 11 சீரிஸ் மாடல்கள் ஆனது தரமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள்இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும் .

Best Mobiles in India

English summary
Redmi Note 11 series May Launching Soon in China: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X