Home
Mobile

அசத்தலான சிப்செட் வசதியுடன் ரெட்மி நோட் 11எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரெட்மி நிறுவனம் சீனாவில் புதிய ரெட்மி நோட் 11எஸ்இ ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வரும் மே 31-ம் தேதி இந்த ரெட்மி நோட் 11எஸ்இ ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு வருகிறது.

 ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் விலை CNY 1,099 (இந்திய மதிப்பில் ரூ.12,800) ஆக உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11 எஸ்இ மாடலின் விலை CNY 1,399 (இந்திய மதிப்பில் ரூ.16,200) ஆக உள்ளது. குறிப்பாகநீலம் மற்றும் கருப்பு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 சார்ந்த MIUI 12.5 இயங்குதளத்தை

புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியுடன் மாலி-ஜி57 எம்சி2 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சாதனம் சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும்
என்றே கூறலாம். பின்பு இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது.

 இந்த புதிய ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் 4ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின்

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றம் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் எனப் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 ஆதரவு, புளூடூத் வி5.1, டூயல் பே

5ஜி, டூயல் சிம் ஆதரவு, புளூடூத் வி5.1, டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய ரெட்மி நோட் 11 எஸ்இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Note 11 SE with MediaTek Dimensity 700 SoC Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X